இலங்கையில் வசிக்கும் தமிழர்களுக்கு மிகபெரிய அச்சுறுத்தல்: சீமான் பேட்டி

Report Print Raju Raju in இந்தியா

இந்திய வெளியுறவுக் கொள்கையின் பிழை காரணமாக இலங்கையில் வசிக்கும் தமிழர்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிகையாளர் மன்றத்தில் வாடகை கார் ஓட்டுநர்களுக்கான உலா எனும் புதிய செல்போன் செயலியை சீமான் தொடங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ராஜீவ்காந்தி கொலை குற்றவாளிகள் 7 பேரை விடுவிப்பது குறித்து பேசும் எந்த கட்சியும் ஆட்சியில் இருக்கும்போது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இலங்கையில் தமிழ் தேசிய தலைமைக்கு வெற்றிடம் ஏற்பட்டிருப்பதாக கருத முடியாது. புதிய அமைப்புகளால் நோக்கம் வலுப்பெற்றுள்ளது.

இந்திய வெளியுறவுக் கொள்கையின் பிழை காரணமாக இலங்கையில் வசிக்கும் தமிழர்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் 20 தொகுதிகளில் தேர்தல் வந்தாலும் எந்தவொரு மாற்றமும் வராது.

இவ்வாறு சீமான் கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்