பாலியல் தொல்லை குறித்து பெண்கள் பேசுவது கேவலம்: நடிகர் தாடி பாலாஜி சர்ச்சை பேச்சு

Report Print Raju Raju in இந்தியா

பாலியல் தொந்தரவு குறித்து பெண்கள் மீ டூவில் பேசி வருவது கேவலமான விடயம் என நடிகர் தாடி பாலாஜி கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சேலத்தில் நிகழ்ச்சி ஒன்றில் நடிகை ஜனனி மற்றும் நடிகர் தாடி பாலாஜி கலந்து கொண்டனர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ஜனனி, சினிமா துறையில் மட்டுமில்லாமல் அனைத்து துறையிலும் பெண்களுக்கு பாலியல் தொந்தரவு உள்ளதாகவும், சினிமா துறை என்பதால் பெரிதாக பேசப்படுகிறது என்றும் கூறினார்.

நடிகர் தாடி பாலாஜி கூறுகையில், மீ டூ விவகாரத்தில் குற்றம் சாட்டும் பெண்கள் தங்களை விளம்பரப்படுத்தி கொள்கிறார்களா? அல்லது மற்றவர்களுக்கு விளம்பரம் தேடிக் கொடுக்கிறார்கள் என்று தெரியவில்லை என குறிப்பிட்டார்.

ஆனால் இது கேவலமான விடயம் என்பதால் தனக்கு உடன்பாடு இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்