அதிர்ச்சி சம்பவம்: அண்ணனை கொன்ற 17 வயது சிறுவனை பழிக்குப்பழியாக வெட்டிகொலை செய்த தம்பி

Report Print Deepthi Deepthi in இந்தியா

சென்னையில் அண்ணனை கொலை செய்த 17 வயது சிறுவன் பழிக்குப்பழியாக வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளான்.

கோயம்பேடு மேட்டுக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் 17 வயதான விக்னேஷ். அதே பகுதியைச் சேர்ந்த 23 வயது இளைஞர் கணேஷ் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் கடந்த மே மாதம் கைதாகி சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில், இரு வாரங்களுக்கு முன் ஜாமினில் விக்னேஷ் வெளியே வந்தார்.

கொலை செய்யப்பட்ட கணேஷின் சகோதரர் பிரகாஷ், விக்னேஷை பழி தீர்க்கும் நோக்குடன் தனது நண்பர்கள் 4 பேருடன், விக்னேஷின் வீட்டிருகே அவரை தடுத்து நிறுத்திய பிரகாஷ் உள்ளிட்டோர் பேசுவது போன்று, மறைவான இடத்திற்கு அழைத்துச் சென்று அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.

பலத்த காயமடைந்த விக்னேஷை அவரது பெற்றோர், ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர், அங்கு சிகிச்சை பலனின்றி விக்னேஷ் உயிரிழந்தார்.

இந்தக் கொலை வழக்கில், பிரகாஷ், மோகன், அஜித், ஆரோக்கியம், சாரதி ஆகிய ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர்.

விசாரணையில் அண்ணனைக் கொன்ற விக்னேஷைக் பழி தீர்ப்பதற்காக கொன்றதாக பிரகாஷ் வாக்குமூலம் அளித்ததாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்