முதல்வரின் மனைவி செய்த செயல்: கொந்தளித்த பொதுமக்கள்

Report Print Arbin Arbin in இந்தியா

மகாராஷ்டிர மாநில முதலமைச்சரின் மனைவி, பாதுகாப்பு எல்லையை மீறி கப்பலின் முனையில் அமர்ந்து செல்பி எடுத்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியாவின் முதல் உள்நாட்டு சொகுசு கப்பல் போக்குவரத்தை மும்பை கடல் பகுதியில் மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் மத்திய அமைச்சர் நிதின் கட்காரி ஆகியோர் இன்று தொடங்கி வைத்தனர்.

இந்த தொடக்க விழாவுக்கு தேவேந்திர பட்னாவிஸ் உடன் அவரது மனைவி அம்ருதாவும் சென்றிருந்தார். அப்போது அம்ருதா பட்னாவிஸ் பாதுகாப்பு எல்லையை தாண்டி கப்பலின் விளிம்பு பகுதியில் அமர்ந்து கொண்டு செல்பி எடுத்துள்ளார்.

பாதுகாப்பு அதிகாரிகள் எச்சரித்தும் அதனை ஏற்காமல் அவர், தொடர்ந்து அங்கேயே அமர்ந்து செல்பி எடுத்துள்ளார். இந்த சம்பவம் தற்போது இணையத்தில் விவாதமாகி வருகின்றன.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers