7 தமிழர்கள் விடுதலை: புதுமண தம்பதிகள் மண மேடையில் அரசுக்கு வைத்த உருக்கமான கோரிக்கை

Report Print Arbin Arbin in இந்தியா

சிறையில் இருக்கும் 7 தமிழர்களை விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கை அஞ்சலட்டையை மணமக்கள் எழுதி அனுப்பும் நிகழ்வுடன் மதுரையில் இன்று வித்தியாசமான திருமண விழா நடைபெற்றுள்ளது.

தமிழ் மீது பற்றும் விவாசயம் மீது ஈர்ப்புமுள்ள இராசராசன்- சாலினி ஆகியோரின் திருமணம் தமிழ் முறைப்படி மதுரையில் இன்று நடந்தது.

அவர்களின் திருமண அழைப்பிதழில், உழவன் இராசராசன், உழத்தி சாலினி என்று வித்தியாசமாக குறிப்பிட்டிருந்தனர்.

இத்திருமணத்தை முன் நின்று நடத்தி வைக்க காவிரி பாதுகாப்பு இயக்கத்தை சேர்ந்த சுற்றுச்சூழல் போராளி முகிலன், ராஜேசுவரி, மக்கள் பிரச்சனைகளுக்காக சட்டப்போராட்டம் நடத்தி வரும் டிராபிக் ராமசாமி,

சி.பி.எம் முன்னாள் எம்.எல்.ஏ. தோழர் நன்மாறன், அறப்போர் இயக்கம் ஜெயராம், மக்கள் பாதை விவேக் ஆகியோர் அழைக்கப்பட்டனர்.

திருமணம் ஒப்பந்தம் முடிந்த பின் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 25 வருடங்களுக்கு மேலாக சிறையில் இருந்து வரும் 7 தமிழர்களை உடனே விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை அரசுக்கு தெரிவிக்கும் வகையில் அஞ்சலட்டையை மணமேடையிலயே மணமக்கள் எழுதி ஒப்படைத்தனர்.

இதுபோல் இந்த நிகழ்வுக்கு வருகை தந்த அனைவரும் அஞ்சலட்டை எழுதினார்கள். தங்கள் திருமண விழாவை தமிழர்களின் கோரிக்கை நிகழ்வாக நடத்தி காட்டியுள்ளனர் இராசராசன்- சாலினி தம்பதிகள்.

திருமண மேடையில் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன், தந்தை பெரியார், நம்மாழ்வார் ஆகியோரின் படங்கள் வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...