ஆபாச புகைப்படங்கள் முதல் வைரமுத்து வரை: சின்மயி இதுவரை எவ்வளவு சர்ச்சைகளில் சிக்கியுள்ளார் தெரியுமா?

Report Print Deepthi Deepthi in இந்தியா

இந்தியாவின் 7 மொழிகளில் பாடிவரும் பின்னணி பாடகி சின்மயி , ஏ. ஆர். ரகுமான் இசையமைப்பில் கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் இடம்பெற்ற ஒரு தெய்வம் தந்த பூவே என்ற பாடல் இவர் பாடிய முதல் திரைப்படப் பாடலாகும்.

7 மொ‌ழிக‌ளி‌ல் 600க்கும் மேற்பட்ட பாடல்கள் பாடி முன்னணி பாடகியாக இருக்கிறார்.

பின்னணி பாடகியை தவிர, நிகழ்ச்சி தொகுப்பாளர் மற்றும் திரைப்படங்களில் கதாபாத்திரங்களுக்கு இவர் பின்னணிக் குரல் கொடுத்துள்ளார்.

பல்வேறு விருதுகளை வாங்கியுள்ள இவர், metoo என்ற ஹேஸ்டேக் மூலம் கவிரப்பேரசு வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை வைத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

ஆனால், பிரபலமாவதற்காக சின்மயி இவ்வாறு செய்துள்ளார் என்று விமர்சனங்கள் எழுந்தாலும், இதுபோன்ற சர்ச்சைகளில் சிக்குவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

டுவிட்டர் மற்றும் பேஸ்புக் போன்ற சமூகவலைதளங்களில் அதிகமாக பயன்படுத்தும் சின்மயி, அதில் பல்வேறு கருத்துக்களை பதிவிட்டு சர்ச்சைகளை சந்தித்துள்ளார்.

சின்மயி இதுவரை சிக்கியுள்ள சர்ச்சைகள்

சில ஆண்டுகளுக்கு முன்னர் தனது தாயுடன் சென்று சென்னை கமிஷ்னர் அலுவலகத்தில் இரண்டு புகார்களை அளித்தார் சின்மயி.

பணப்பிரச்சனை

வெளிநாடுகளில் இசை நிகழ்ச்சிகள் நடத்தும் கஜேந்திரகுமார் என்பவர் எனக்கு ரூ.12 லட்சம் பணம் தரவேண்டும்.

பலமுறை கேட்டும் அவர் பணம் தராமல் காலம் கடத்திக்கொண்டு வருகிறார். எனவே ரூ.12 லட்சம் பணத்தை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளித்தார்.

மீனவர்கள் குறித்து கருத்து

2011 ஆம் ஆண்டில், மீனவர்கள் மீன்களைக் கொல்லலாம். கப்பல் படை மீனவர்களைக் கொன்றால் தப்பா ? என கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதனால் இவர் தமிழக மீனவர்களுக்கு எதிராக பேசியுள்ளார் என எதிர்ப்பு கிளம்பியது.

ஆபாச புகைப்படங்கள்

2012 ஆம் ஆண்டு மற்றொரு புகா‌ரி‌ல், டுவிட்டர் இணையதளத்தில் என்னை ஆபாசமாக சித்தரித்து புகைப்படங்களும், அருவருக்கத்தக்க வாசகங்களும் இடம் பெற்றுள்ளன.

6 பேர் சேர்ந்து இந்த அருவருக்கத்தக்க செயலில் ஈடுபட்டுள்ளனர். உதவி பேராசிரியர் ஒருவருக்கும் இதில் தொடர்பு உள்ளது. அவர்கள் மீது பொலிசார் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் ‌எ‌ன்ற கூறியிருக்கிறார்.

இந்த, ஆறு பேரில் லாஸ் ஏஞ்சலஸ் நகரை சார்ந்த எழுத்தாளர் இராம் என்பவரும் ஒருவர். தன் மீதான புகார் தவறானது எனவும் அதனால் தான் மனவேதனை அடைந்துள்ளதாகவும் அதை திரும்ப பெறாவிட்டால் மான நஷ்ட வழக்கு போடவேண்டி வரும் என கூறினார்.

இந்த விவகாரம் அப்போது பரபரப்பை ஏற்படுத்தியது.

இடஒதுக்கீடு விவகாரம்

தமிழ்நாட்டில் தாழ்த்தப்பட்டவர்கள் என்று யாரும் கிடையாது.

அரசியல்வாதிகள் தங்களுக்குக் கீழே உள்ளவர்களைத் தாழ்த்தப்பட்டவர்கள் எனக் காண்பித்து, சலுகைகள் பெற்றுத் தருகின்றனர் என டுவிட் போட்டிருந்தார். இதற்கும் கடுமையான எதிர்வினைகள் வந்தது.

வைரமுத்து மீதான பாலியல் புகார்

இப்படி பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய சின்மயி, தற்போது வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். 2004 ஆம் ஆண்டில் சுவிட்சர்லாந்தில் நடந்த ஒரு இசை நிகழ்ச்சி விழாவிற்காக சென்ற போது வைரமுத்து தன்னை ஹொட்டல் அறைக்கு அழைத்தார் என புகார் தெரிவித்துள்ளார்.

தற்போது, இதுதொடர்பாக வழக்கு தொடர்வேன் என கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...