15 வயது சிறுவனுக்கு 60 வயது பாட்டியுடன் திருமணம்: திடுக்கிடும் பின்னணி

Report Print Raju Raju in இந்தியா

இந்தியாவில் தவறான செல்போன் எண்ணில் பேசிய குரலால் ஈர்க்கப்பட்ட 15 வயது சிறுவனுக்கு 60 வயது மூதாட்டியைத் திருமணம் செய்து வைக்க முயற்சி நடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு அசாமின் கோல்பாரா மாவட்டத்தில் 15 வயது சிறுவன் வசித்து வருகிறான்.

ஒரு மாதத்துக்கு முன்னர் சிறுவன் தனது நண்பனுடன் போனில் பேச நினைத்தான்.

ஆனால் தவறான எண்ணை அழுத்தியதால், இணைப்பு வேறொரு பெண்ணுக்குச் சென்றுள்ளது. மறுபுறம் பேசிய குரல் இனிமையாக இருந்ததால், அடிக்கடி பேச ஆரம்பித்தான்.

இதைத் தொடர்ந்து இருவரும் நேரில் சந்தித்தபோது சிறுவனுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. இனிமையான குரலுக்குச் சொந்தக்காரர் 60 வயதுள்ள மூதாட்டியாக இருந்தார். அப்போது இருவரின் எதிர்ப்பையும் மீறி, மூதாட்டியின் குடும்பத்தினர் இருவருக்கும் திருமணம் செய்து வைக்க முயற்சி செய்தனர்.

சிறுவன் பேசிய விதம் தனக்குப் பிடித்திருந்ததாகவும், அவரை நண்பனாக நினைத்ததாகவும் சம்பந்தப்பட்ட மூதாட்டி தெரிவித்துள்ளார். ஆனால் திருமணம் செய்துகொள்ள நினைத்ததில்லை என்றும் அவர் கூறினார்.

இதனிடையே குழந்தைகள் உரிமைகளுக்கான மாநிலப் பாதுகாப்பு ஆணையம் நடந்த சம்பவம் குறித்து விசாரித்து வருகிறது.

கோல்பாரா மாவட்ட துணை ஆணையர் வர்நாலி தேகா கூறும்போது, சிறுவனைக் கட்டாயப்படுத்தித் திருமணம் செய்ய முயற்சித்ததாக அதிகாரபூர்வப் புகார் எதுவும் வரவில்லை.

இதுகுறித்து விசாரித்து வருகிறோம் என கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers