காதலி இறந்த துக்கத்தில் தற்கொலை செய்துகொண்ட காதலன்: சோக சம்பவம்

Report Print Vijay Amburore in இந்தியா

காஞ்சிபுரத்தில் காதலி இறந்த துக்கத்தில் கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சீபுரத்தை அடுத்த கீழம்பியை சேர்ந்த உதயகுமார் என்பவரின் மகன் சுசீந்திரன் (20), தனியார் கல்லூரியில் டிப்ளமோ படித்து வருகிறார்.

அதேகல்லூரியில் படித்து வந்த ஒரு பெண்ணை சுசீந்திரன் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் அந்த பெண் உடல்நிலை சரியில்லாமல் இறந்துபோனார். இதனால் மனமுடைந்து காணப்பட்ட சுசீந்திரன் 12ம் தேதி தூக்குபோட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

இதனையடுத்து அவரை மீட்ட குடும்பத்தினர் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இந்த நிலையில் கடந்த வியாழக்கிழமையன்று சுசீந்திரன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். தற்போது இச்சம்பவம் குறித்து பாலுச்செட்டிசத்திரம் பொலிஸார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்