ஐயப்ப உடையில் ஆபாச செல்பி எடுத்த இளம் பெண்ணுக்கு நேர்ந்த கதி

Report Print Raju Raju in இந்தியா

சபரிமலை கோவிலுக்குள் செல்ல முயன்ற ரெஹானா பாத்திமா கேரளா முஸ்லீம் ஜமாத்தில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.

சபரிமலை கோவிலுக்குள் பெண்கள் நுழைவிற்கு எதிராக தொடர்ந்து போராட்டம் நடந்து வருகிறது

இந்நிலையில் ரெஹானா பாத்திமா என்ற இஸ்லாமிய பெண் கடந்த வெள்ளிக்கிழமை சபரிமலைக்கு செல்ல முயன்றார்.

இதோடு ஐயப்பா உடையில் அவர் வெளியிட்ட ஆபாச புகைப்படம் சர்ச்சையை ஏற்படுத்தியது.

பொலிஸ் பாதுகாப்புடன் இவர் இருமுடி கட்டி உள்ளே செல்ல முயன்றார்.

அவருடன் ஆந்திராவைச் சோ்ந்த கவிதாவும் சென்றார். ஆனால் இவர்கள் உள்ளே அனுமதிக்கப்படவில்லை.

ரெஹானா பாத்திமா முஸ்லீம் என்பதால் இந்த பிரச்சனை பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது, அவர் ஐயப்ப பக்தை எல்லாம் இல்லை, அவர் போராட்டம் செய்து பெயர் வாங்க வேண்டும் என்று இப்படி செய்கிறார் என்று கூறினார்கள். அதேபோல் இவர் மதம் மாறி இந்துவாகிவிட்டார் என்றும் இன்னொரு பக்கம் விவாதம் செய்யப்பட்டது.

இந்நிலையில் தற்போது இவர் முஸ்லீம் சமூகத்தில் இருந்து நீக்கப்பட்டு உள்ளார். கேரளா முஸ்லீம் ஜமாஅத் கவுன்சில் இவரை அதிரடியாக நீக்கி உள்ளது. இவரது குடும்ப உறுப்பினர்களையும் நீக்கி உள்ளது. இவர் இந்து மதத்திற்கு களங்கம் விளைவிக்க முயற்சி செய்தார் என்று கூறி இவரை நீக்கி இருக்கிறார்கள்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...