வைரமுத்துவுக்கு பலமுறை போன் செய்த சின்மயி: வெளியான தகவல்

Report Print Deepthi Deepthi in இந்தியா

சின்மயி வானத்தை பார்த்துக்கொண்டு எச்சியை துப்புகிறார், இதில் அவருக்கு தான் ஆபத்து, வைரமுத்துவுக்கு இதில் எவ்வித பிரச்சனையும் இல்லை என சுவிட்சர்லாந்தில் நிகழ்ச்சிக்கு சின்மயியியை அழைத்து சென்ற இசையமைப்பாளர் இனியவன் கூறியுள்ளார்.

இசையமைப்பாளர் இனியவன் கூறியதாவது, சுவிட்சர்லாந்தில் அப்படி ஒரு சம்பவம் நடக்காத போது, சின்மயி வைத்துள்ள குற்றச்சாட்டுகள் ஆச்சரியமாக உள்ளது.

நிகழ்ச்சி முடிந்தபின்னர் வைமுத்து தனது வீட்டுக்கு புறப்பட்டுவிட்டார். சுவிஸில் பேசிய பணத்தை விட இரண்டு மடங்கு பணம் வேண்டும் என்று சின்மயியின் அம்மா சண்டை போட்டார். ஒயின் குடித்துவிட்டு சண்டை போட்டது மட்டுமல்லாமல், அங்கிருந்து ஒயின் பாட்டிலையும் வாங்கிசென்றார்கள்.

இதற்கு, நாங்கள் தான் பணம் செலவழிக்க வேண்டியுள்ளது என ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் நொந்துகொண்டார்.

2012 ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற ஒரு இசை நிகழ்ச்சிக்கு வைரமுத்து அவர்கள் வரிகளில் சின்மயி பாடவிருந்தார். ஆனால் நிகழ்ச்சிக்கு முந்தைய நாள் போன் செய்து, என்னால் வர இயலாது, எனது அம்மா வேறு ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துவிட்டார் என கூறிவிட்டார்.

இதனால், வேறு ஒரு பாடகியை வைத்து நிகழ்ச்சி நடத்தப்பட்டது, இதனால் வைரமுத்து அவர்கள், சின்மயி மீது சற்று கோபப்பட்டார். அதன்பிறகு இரண்டு ஆண்டுகள் பேச்சுவார்த்தை இல்லை.

பிறகு, சின்மயியின் திருமணத்திற்கு Pro தான், விருந்தினர்களுக்கு அழைப்பு விடுத்தார் என்று கூறப்பட்ட தகவல் பொய்யானது. சின்மயி பலமுறை வைரமுத்து அவர்களுக்கு போன் செய்து , 3 நாட்கள் காத்திருந்தார்.

அதன்பிறகு, வைரமுத்து மதன் கார்க்கியை தொடர்பு கொண்டு, அவர் மூலம் வைரமுத்து அவர்களை நேரடியாக சந்தித்து பத்திரிகை வைத்தார் சின்மயி.

இனிமேல், சின்மயி போன்ற பெண்களை பாட அழைத்தால், நிகழ்ச்சி முடிந்த பின்னர், நான் கற்புடன வந்தேன், கற்புடன் திரும்பி வந்தேன் என அவர்களிடம் லெட்டர் எழுதிவாங்க வேண்டும்.

ஏனெனில், கையைபிடித்து இழுத்துவிட்டார்கள் என்று புகார் அளித்துவிட்டால் என்ன செய்வது. மீடூவால் சின்மயி செய்துள்ளது கேவலமானது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...