என்னை விபச்சாரி என்று கெட்ட வார்த்தைகளால் திட்டினார்கள்: சின்மயி வேதனை

Report Print Deepthi Deepthi in இந்தியா

மீடூ எழுச்சி மூலம் கவிஞர் வைரமுத்து மீது பாலியல் புகார் கூறியுள்ள பாடகி சின்மயி, விரைவில் வைரமுத்து மீது வழக்கு தொடருவேன், அதற்கான ஆதாரங்களை தேடிக்கொண்டிருக்கிறேன் என கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறியதாவது, நான் சாதரண குடும்பத்தை சேர்ந்த பெண். எனது அம்மா விவாரத்து செய்துகொண்ட பின்னர் தனி ஆளாக என்னை வளர்க்க சிரமப்பட்டார்.

2003 ஆம் ஆண்டு நான் தமிழக மீனவர்கள் குறித்து தவறாக பேசியதாக வெளியான பொய்யான தகவலால், நாங்கள் மிகவும் பாதிக்கப்பட்டோம். நான் ஒரு விபச்சாரி என விமர்சித்து அசிங்கமாக திட்டினார்கள்.

இது தொடர்பாக நாங்கள் காவல்துறையை அணுகி, பல்வேறு பிரச்சனைகளுக்கு ஆளானோம். இந்த பிரச்சனைக்கு பிறகு எதற்காக, இப்படி காவல்துறைக்கு வந்தோம் என நானும் எனது அம்மாவும் நொந்துகொண்டோம்.

நான் தற்போது வைரமுத்து மீது பாலியல் புகார் அளித்துள்ளேன். ஆனால் என்னை போன்று பல பெண்களும் வைரமுத்துவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், எனது கணவர் எனக்கு கொடுத்த ஆதரவு போன்று, அந்த பெண்களுக்கு ஆதரவு கிடைக்கவில்லை.

தற்போது கூட, நான் வைரமுத்து கொடுத்துள்ள பாலியல் புகாருக்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்து, எனக்கு கெட்ட வார்த்தைகளால் மெசேஜ் அனுப்புகிறார்கள்.

2005 ஆம் ஆண்டில் நான் பாலியல் சம்பவத்தால் பாதிக்கப்பட்டுள்ளதால், அப்போது இருக்கும் சட்டங்களை பயன்படுத்தி வழக்கு தொடர்வேன் என கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...