சின்மயியுடன் கை கோர்த்த நடிகை லஷ்மி ராமகிருஷ்ணன்: பிரச்சனை குறித்து கூட்டாக விளக்கம்

Report Print Raju Raju in இந்தியா

சின்மயி ஏன் திரைத்துறையினரிடம் புகார் அளிக்கவில்லை என்று கேட்டதற்கு நம்பிக்கை இல்லை என்பதால் தான் அவர் புகார் அளிக்கவில்லை என லட்சுமி ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.

தென்னிந்திய திரைத்துறை பெண்கள் மையம் சார்பில் சென்னையில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது

இதில் பாடகி சின்மயி, நடிகை லஷ்மி ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது செய்தியாளர்கள் சார்பில் மீ டூவுக்கு முன்னர் திரைத்துறையைச் சார்ந்த நீங்கள் திரைத்துறையில் இதற்கான புகாரை ஏன் அளிக்கவில்லை என சின்மயியிடம் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த லஷ்மி ராமகிருஷ்ணன், மீ டூ மூவ்மென்ட் இல்லாமல் சின்மயி இந்த விஷயத்தைச் சொல்லியிருந்தால் இதை நீங்கள் எப்படி அணுகி இருப்பீர்கள், இதை திரைத்துறை சங்கத்தில் சொல்லியிருந்தால் அவர்கள் இதை உண்மையாக அணுகி இருப்பார்களா? என பத்திரிகையாளர்களிடம் கேள்வி எழுப்பினார்.

மேலும், திரைத்துறை சங்கத்தின் மேல் நம்பிக்கை இல்லாததால் தான் இவ்வளவு நாட்கள் சின்மயி பேசவில்லை என கூறினார்.

அப்படியானால் எதற்கு ஒரு சங்கம் அதற்கு தேர்தலில் ஓட்டு போட்டீர்கள் என பத்திரிகையாளர்கள் பதில் கேள்வி எழுப்பினர். அதற்கு, இந்த சமுதாயத்தில் தானே இருக்கிறோம், சமுதாயத்தின் மீதே நம்பிக்கை இல்லை, அதற்காக வெளியே போகிறேன் என்று சொல்லமுடியுமா? என லட்சுமி ராமகிருஷ்ணன் பதிலளித்தார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...