500 ரயில்கள் கடந்து சென்றாலும்... 61 பேரை பலிவாங்கிய ரயில் விபத்துக்கு காரணமானவரின் அதிர்ச்சிப் பேச்சு

Report Print Arbin Arbin in இந்தியா

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் பகுதியில் தசரா நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த ஒருங்கிணைப்பாளர் கூறியதாக வெளியாகியுள்ள அதிர்ச்சிப் பேச்சு பொதுமக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேசத்தையே பெரும் சோகத்தில் ஆழ்த்திய, 61 அப்பாவி உயிர்களை பலிவாங்கிய அமிர்தசரஸ் ரயில் விபத்தில், நிகழ்ச்சியை குறித்த பகுதியில் நடத்துவதற்கு எந்தவித முன் அனுமதியும் பெறவில்லை,

பொலிஸ் பாதுகாப்பு கோரவில்லை, முனிசிபல் கார்ப்பரேஷன் அனுமதியும் பெறவில்லை, ரயில்வே துறைக்கும் தெரிவிக்கவில்லை என்று முழுக்க முழுக்க அலட்சியமே காரணமாக அமைந்துள்ளது.

குறித்த நிகழ்ச்சியில் தலைமை விருந்தாளியாகக் கலந்து கொண்ட நவ்ஜோத் கவுர் சித்துவிடம் தசரா நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த ஒருங்கிணைப்பாளர் கூறியதாக வெளியான பேச்சு பாதிக்கப்பட்ட மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மாலைகளுடன் காட்சியளிக்கும் நவ்ஜோத் கவுர் சித்துவுக்கு அருகில் இருக்கும் நபர் ஒலிபெருக்கி ஒன்றில், மேடம், ரயில்வே பாலங்களில் நிற்பது பற்றி இந்த மக்கள் கவலைப்பட மாட்டார்கள்.

5000 பேர் நின்று கொண்டிருக்கிறார்கள். தண்டவாளத்தில் நின்று கொண்டிருக்கிறார்கள். உங்களுக்காக நின்று கொண்டிருக்கிறார்கள்,

500 ரயில்கள் கடந்து சென்றாலும் நகர மாட்டார்கள் என்று கூறிய அதிர்ச்சி பேச்சு வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

மக்கள் இருப்புப் பாதையில் நிற்பது தெரிந்திருந்துமே நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அலட்சியமாக இருந்துள்ளனர்,

வரும் ஆபத்தைப் பற்றி தெரியாமல் போலி உற்சாகம் காட்டி நிகழ்ச்சியை பாதுகாப்பில்லாமல் நடத்தியுள்ளனர் என்பது தற்போது அம்பலமாகியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்