நள்ளிரவில் கதவை தட்டிய நடிகர் பிரசாந்தின் தந்தை: கதறிய இளம்பெண்

Report Print Arbin Arbin in இந்தியா

தமிழக திரையுலக பிரபலங்கள் பலர் மீ டூ புயலில் சிக்கி விளக்கமளித்துவரும் நிலையில், நடிகரும் இயக்குனருமான தியாகராஜன் தொடர்பில் பிரபல பெண் புகைப்படக் கலைஞர் ப்ரீதிகா மேனன் அதிரடி புகார் அளித்துள்ளார்.

நடிகர் பிரசாந்தின் தந்தையும் இயக்குனருமான தியாகராஜன், நள்ளிரவில் இரண்டு முறை தமது அறையின் கதவை தட்டியதாகவும்,

இதனால் தமது உயிருக்கும் உடலுக்கும் அச்சுறுத்தல் என கதறியதாகவும் அவர் தற்போது வெளிப்படுத்தியுள்ளார்.

பிரபல புகைப்படக் கலைஞர் ஒருவரின் சிபாரிசின் அடிப்படையில், அப்போது தியாகராஜன் தமது மகனை வைத்து இயக்கிய பொன்னர் சங்கர் படத்தில் தாம் பணியாற்றியதாக கூறும் ப்ரீதிகா மேனன்,

தியாகராஜனால் தமக்கு ஏற்பட்ட பாலியல் அச்சுறத்தலை பேஸ்புக்கில் பதிவு செய்துள்ளார்.

அவருடன் பணியாற்றிய சில நாட்களிலேயே, தம்மிடம் தாய்லாந்து பெண்கள் குறித்தும் அவர்களுடன் பாலியல் உறவு கொண்டது குறித்து தியாகராஜன் தம்மிடம் பகிர்ந்து கொண்டதாகவும்,

எப்போதும் அவர் அருகிலேயே தாம் இருக்க வேண்டும் என அடம் பிடித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஒருகட்டத்தில், தமது ஹொட்டல் அறையை ஒரே நாளில் இரண்டு முறை தட்டி தொல்லை தந்ததாக கூறும் ப்ரீதிகா மேனன்,

அந்த நாள் இரவு முழுவதும் தாம் தூங்காமல் விழித்திருந்ததாகவும், தமது நண்பர்கள் மட்டும் இல்லை என்றால் அப்போதே தமது நிலை கவலைக்கிடமாக மாறியிருக்கும் என குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே குறித்த திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த பின்னர் தாம் பணியாற்றியதற்கான ஊதியம் கூட வழங்காமல் தியாகராஜன் திருப்பி அனுப்பியதாகவும் ப்ரீதிகா மேனன் வெளிப்படுத்தியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்