சபரிமலைக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்

Report Print Fathima Fathima in இந்தியா

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது என நடிகர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

உச்சநீதிமன்ற தீர்ப்பை அடுத்து, சபரிமலை கோயிலுக்குள் நுழைய பெண்கள் முயற்சித்தாலும் ஐயப்ப பக்தர்களின் போராட்டத்தால் பரபரப்பானது.

இதனால் தொடர்ந்து பிரச்சனை நீடித்து வரும் நிலையில், சபரிமலைக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது என நடிகர் சிவகுமார் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், 100 ஆண்டுகளுக்கு முன்னர் சபரிமலை அடர்ந்த காடாக இருந்தது, விலங்குகள் தாக்கம் அச்சம் இருந்ததால் பக்தர்கள் கூட்டமாக சென்று வழிபட்டனர்.

பெண்களுடைய மாதவிடாய் வாசம், மோப்ப சக்தி கொண்ட விலங்குகளை ஈர்க்கும் என்பதால் ஆண்கள் அழைத்து செல்வதில்லை.

ஆனால் தற்போதைய சூழல் வேறு, நீதிமன்றமும் அனுமதித்துவிட்டது, இனியும் பெண்களை தடுப்பது தவறு.

இப்போது தடுத்தாலும், இன்னும் ஐந்தாண்டுகளில் பெண்கள் நிச்சயம் சபரிமலைக்கு செல்வர். அதை யாராலும் தடுக்க முடியாது.

நாம் இன்று இந்த உலகை பார்ப்பதற்கு காரணம் பெண்கள், அனைவரும் அதை மனதில் வைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்