நொடிப்பொழுதில் நடந்த விபரீதம்: பேருந்துக்காக காத்திருந்த நால்வர் பலியான பரிதாபம்

Report Print Fathima Fathima in இந்தியா

தமிழகத்தின் மதுரையில் பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த போது கார் மோதி ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் பலியான பரிதாப சம்பவம் நடந்துள்ளது.

மதுரையின் வாடிப்பட்டி அருகே வடிகப்பட்டி பகவதியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் முத்தன், மனைவி மரத்தி (வயது 60).

இவரது மகள் லெட்சுமி (45). இவருக்குத் திருமணமாகி வசந்தி (22) என்ற மகள் உள்ளார், இவருக்கு அத்விக் என்ற 8 மாத குழந்தை உள்ளது.

மரத்திக்கும், அத்விக்கிற்கும் உடல்நிலை சரியில்லாததால், தாய், மகள், பேத்தி, கொள்ளுப்பேரன் ஆகியோர் குடும்பமாக இன்று (சனிக்கிழமை) காலை மதுரை அரசு மருத்துவமனைக்கு செல்வதற்காக வந்துள்ளனர்.

பேருந்துக்காக காத்திருந்த போது, கோயம்புத்தூரை நோக்கி சென்ற கார் ஒன்று தாறுமாறாக வந்துள்ளது.

பேருந்து நிறுத்தத்தில் மோதியதில், சம்பவ இடத்திலேயே லெட்சுமியும், அவரது தாய் மரத்தியும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

வசந்தியும், கைக்குழந்தை அத்விக்கும் படுகாயம் அடைந்து உயிருக்குப் போராடிய நிலையில், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி பலியானார்கள்.

பொலிசார் நடத்திய விசாரணையில் காரின் இடதுபக்க டயர் பஞ்சரானதால் நிலைதடுமாறி இந்த விபத்து நடந்தது தெரியவந்துள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்