பொலிசாரை சரமாரியாக தாக்கிய பாஜக கவுன்சிலர்: வெளியான வீடியோவால் பரபரப்பு

Report Print Kavitha in இந்தியா

உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில் பாஜக கவுன்சிலர் ஒருவர் காவலரைத் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மீரட்டில் உள்ள உணவகம் ஒன்றிற்கு பெண் வழக்கறிஞர் ஒருவருடன் காவலர் ஒருவர் உணவருந்த சென்றார்.

இதன்போது அவர்களுக்கும் உணவக உரிமையாளருக்கும் இடையே சில காரணங்களால் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், உணவக உரிமையாளர் அளித்த தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த அப்பகுதி பாஜக கவுன்சிலர் மனிஷ் பன்வார் வந்து காவலரை சரமாரியாக தாக்கினார்.

தற்போது குறித்த சம்பவம் வீடியோவாக வெளியாகி சமூகவலைத்தலங்களில் வைரலானது. இந்த வீடியோ வைரலான நிலையில் மனிஷ் பன்வார் உடனடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்