ஆத்திரமடைந்த சின்மயி! பத்திரிக்கையாளர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு

Report Print Raju Raju in இந்தியா

செய்தியாளர்களை சந்தித்த பாடகி சின்மயி அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

கவிஞர் வைரமுத்து தன்னை படுக்கைக்கு அழைத்தார் என பாடகி சின்மயி கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் சென்னை சேப்பாக்கத்தில், #Metoo விவகாரம் குறித்து தென்னிந்திய திரைத்துறையைச் சேர்ந்த பெண்கள் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

அதில் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன், பாடகி சின்மயி, தொகுப்பாளர் சிவரஞ்சனி உள்ளிட்டோர் கூட்டாக பேட்டியளித்தனர்.

அப்போது செய்தியாளர்கள் எழுப்பிய கேள்வியால் ஆத்திரமடைந்த சின்மயி, பத்திரிகையாளர்களுடன் வாக்குவாத்தில் ஈடுபட்டார்.

பாலியல் சம்பவம் குறித்து புகார் அளிக்காதது ஏன் என கேள்வி கேட்பதே தவறானது என கைகூப்பி கேட்டுக்கொண்டார்.

அனைத்து ஆண்களையும் குற்றம்சாட்டவில்லை என்று கூறிய சின்மயி, வைரமுத்து மீது வழக்கு தொடர்வதற்கான ஆவணங்களை திரட்டி வருவதாக தெரிவித்தார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்