வைரமுத்து- சின்மயி விவகாரம்: கருத்து தெரிவித்த நடிகர் ரஜினிகாந்த்

Report Print Raju Raju in இந்தியா

கவிஞர் வைரமுத்து - சின்மயி விவகாரம் குறித்து நடிகர் ரஜினிகாந்த் கருத்து தெரிவித்துள்ளார்.

சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியின் போது வைரமுத்து தன்னை படுக்கைக்கு அழைத்தார் என சின்மயி கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது.

இது குறித்து நடிகர் கமல்ஹாசன் உட்பட சில திரை பிரபலங்கள் கருத்து தெரிவித்தனர்.

இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் நிரூபர்களுக்கு பேட்டியளித்த நடிகர் ரஜினிகாந்த் இது குறித்து பேசியுள்ளார்.

அதில், பிறந்தநாளன்று கட்சி தொடங்கவில்லை, ஆனால் கட்சி தொடங்குவதற்கான 90 சதவீத பணிகள் முடிந்துவிட்டது.

வைரமுத்து - சின்மயி விவகாரம் குறித்து கேட்கிறீர்கள், அந்த குற்றச்சாட்டு குறித்து வைரமுத்து மறுத்துள்ளார்.

அப்படி ஒரு நிகழ்வே நடக்கவில்லை என்றும் இது குறித்து நீதிமன்றத்தை நாடலாம் என்றும் அவர் கூறியதாக தெரிவித்துள்ளார்.

மேலும் மீடூ விடயத்தை தான் ஆதரிப்பதாகவும், ஆனால் இதை தவறாக பயன்படுத்தக்கூடாது எனவும் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers