பீர் பாட்டிலால் தாக்கி ஓட்டல் ஊழியர் கொலை: பொலிசார் வலைவீச்சு

Report Print Kavitha in இந்தியா

தோழிகளிடம் தகராறு செய்ததை தட்டிக்கேட்டதால் பீர் பாட்டிலால் தாக்கி ஓட்டல் ஊழியர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் ஜெகதீஷ் சிங்(வயது 21), பெங்களூரு யஷ்வந்தபுரம் அருகே மத்திகெரேயில் தங்கி, ஓட்டல் ஒன்றில் ஊழியராக வேலை பார்த்து வந்தவர்.

இவர் நேற்று முன்தினம் இரவு தனது நண்பர் சுகாஷ் சிங் என்பவருடன் மத்திகெரே, எல்.சி.ஆர். ரோட்டில் உள்ள ஓட்டலுக்கு சாப்பிட சென்றார்.

இதன்போது அவரது தோழிகள் 2 பேரும் சாப்பிட ஓட்டலுக்கு சென்றிருந்தனர்.

ஓட்டல் முன்பாக வைத்து ஜெகதீஷ் சிங் தனது நண்பர் மற்றும் தோழிகளுடன் பேசிக் கொண்டிருந்த வேளையில் குடிபோதையில் 3 வாலிபர்கள் வந்தனர்.

இந்நிலையில் குறித்த நபர்கள் ஜெகதீஷ் சிங்கின் தோழிகளிடம் தகராறு செய்ததனர் இதில் ஆத்திரமடைந்த ஜெகதீஷ் சிங், 3 வாலிபர்களையும் தட்டிக்கேட்ட போது திடீரென்று அந்த வாலிபர்கள் தாங்கள் வைத்திருந்த பீர் பாட்டிலால் ஜெகதீஷ் சிங்கின் தலையில் தாக்கிவிட்டது தப்பி ஓடிவிட்டார்கள்.

சம்பவத்தின் போது உடனே அந்த வாலிபர்களை சுகாஷ் சிங் பிடிக்க முயன்றார். இதனால் அவரையும், வாலிபர்கள் தாக்கிவிட்டு தப்பி ஓடிவிட்டார்கள்.

இதில், ஜெகதீஷ் சிங்கின் தலையில் பலத்தகாயமும் சுகாஷ் சிங்கும் காயம் ஏற்பட்டது, மேலும் இருவரும் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ஜெகதீஷ் சிங் இறந்துவிட்டார். சுகாஷ் சிங் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

சம்பவமறிந்து வந்த யஷ்வந்தபுரம் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதில் அப்போது குடிபோதையில் இருந்த 3 வாலிபர்கள் ஜெகதீஷ் சிங்கை கொலை செய்ததும், அந்த வாலிபர்கள் 3 பேருக்கும் சுமார் 25 வயது இருக்கும் என்றும் தெரியவந்துள்ளது

குறித்து யஷ்வந்தபுரம் பொலிசார் வழக்குப்பதிவு செய்து அந்த 3 வாலிபர்களையும் வலைவீசி தேடிவருகிறார்கள்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers