60 பேரை பலிகொண்ட தசரா கொண்டாட்டம்: ராவணனாக நடித்தவரும் உயிரிழந்த சோகம்

Report Print Fathima Fathima in இந்தியா

அமிர்தசரஸ் விபத்தில் ராவணனாக மேடையில் நடித்த தல்விர் சிங்கும், ரயில் விபத்தில் சிக்கி உயிரிழந்த சோக சம்பவம் நடந்துள்ளது.

தசரா கொண்டாட்டத்தின் போது நடந்த விபத்தில் 60 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

விபத்து நடந்த இடத்தில் உறவுகள், செல்போனில் இறந்தவர்களின் சடலங்களை தேடிய சம்பவம் பார்ப்போரின் கண்களை குளமாக்கின.

இவர்களில் தல்விர் சிங் என்பவரும் ஒருவர், எப்போதும் ராமராக வேடமிடுபவர் இந்த ஆண்டு நண்பர்களின் வற்புறுத்தலின் பேரில் ராவணனாக நடித்தார்.

இவர் பற்றி சகோதரர் பல்பிர் சிங் கூறுகையில், தொழில்முறையாக பட்டம் தயாரித்து வரும் தல்விர் சிங் நடிப்பதில் ஆர்வம் கொண்டவர்.

எப்போதும் ராம்லீலாவில் பங்கேற்பார், ராமராக வேடமிடுபவர் இந்தாண்டு ராவணனாக வேடமிட்டார்.

நடித்து முடித்த பின்னர் ராவணனின் பொம்மை எரிவதை பார்ப்பதற்காக மக்களோடு இணைந்தார், அப்போதே இக்கொடூர சம்பவம் நடந்துள்ளது என கண்ணீ்ர மல்க தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்