முத்தம் கொடுத்தது பாதிப்பா? கர்ப்பமாகவா ஆகிவிட்டார்? சின்மயி விவகாரம் குறித்து சர்ச்சையாக பேசிய பிரபலம்

Report Print Raju Raju in இந்தியா

பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக அது குறித்து புகார் கூறுவார்களே தவிர சின்மயி போல நேரம், காலம் பார்த்து புகார் தெரிவிக்க மாட்டார்கள் என பேராசிரியர் சிவ பிரகாசம் கூறியுள்ளார்.

வைரமுத்து - சின்மயி விவகாரம் தான் தற்போது பரபரப்பாக பேசும் விடயமாக மாறியுள்ளது. இதோடு வைரமுத்து தங்களுக்கு தொல்லை கொடுத்ததாக சில பெண்கள் கூறினார்கள்.

இது குறித்து பிரபலங்கள் பலரும் தங்கள் கருத்துக்களை கூறி வருகின்றனர்.

இந்நிலையில் இது குறித்து தமிழ் ஆர்வலரும், பேராசிரியருமான சிவபிரகாசம் தனியார் பத்திரிக்கைக்கு பேட்டியளித்தார். அவர் கூறுகையில், பா.ஜ.க கட்சி தான் சின்மயியை பின்னணியில் இயக்குகிறது.

சினிமா துறையில் பாலியல் ரீதியான விடயங்கள் எல்லாம் ஒரு பொருட்டே இல்லை என்பது என் கருத்து.

வைரமுத்து எந்த தவறு செய்திருக்க மாட்டார். சின்மயி பேசுவது தவறு.

பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக அது குறித்து புகார் கூறுவார்களே தவிர சின்மயி போல நேரம், காலம் பார்த்து புகார் தெரிவிக்க மாட்டார்கள்.

கண்ணகி காலத்திலேயே பெண்களுக்கு சுதந்திரம் இருந்தது என கூறினார்.

அப்போது பேட்டி எடுப்பவர் சிவ பிரகாசமிடம், வைரமுத்து தனக்கு முத்தம் கொடுக்க முயன்றதாக பாதிக்கப்பட்ட பெண் கூறியது குறித்து கருத்து கேட்டார்.

அதற்கு, முத்தம் கொடுத்தெல்லாம் பாதிப்பே இல்லை. கர்ப்பமாகவா ஆக்கிவிட்டார்கள் என சிவப்பிரகாசம் கூறினார்

மேலும், இவர்கள் கொடுக்கும் புகாரையெல்லாம் அப்படியே ஏற்று கொள்ள முடியாது.

அப்படி உண்மை இருந்தால் அவர்கள் நீதிமன்றத்துக்கு தான் செல்ல வேண்டும் என கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்