தொடர் பாலியல் புகார்கள்: வைரமுத்து மருத்துவமனையில் அனுமதி

Report Print Fathima Fathima in இந்தியா

கவிப்பேரரசு என கொண்டாடப்பட்ட வைரமுத்து மீது பாலியல் புகார்கள் எழுந்த நிலையில் இன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வைரமுத்து மீது பெங்களூர் பெண் பாலியல் புகார் கூறிய நிலையில், பாடகி சின்மயியும் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

இதனை மறுத்த வைரமுத்து, இதற்கு மீண்டும் மறுப்பு தெரிவித்து ‘என் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் முழுக்க முழுக்க பொய்யானது. உள்நோக்கமுடையது. அவை உண்மையாக இருந்தால், சம்மந்தப்பட்டவர்கள் என் மீது வழக்கு தொடுக்கலாம். சந்திக்க காத்திருக்கிறேன்’ என்று வைரமுத்து வீடியோ வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில் இன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார், உணவு ஒவ்வாமை பிரச்சனைியின் காரணமாக மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்