வைரமுத்து இப்படிப்பட்டவர் தான்: நடிகை குஷ்பு அதிரடி

Report Print Raju Raju in இந்தியா

கவிஞர் வைரமுத்து கண்ணியமானவர் என நடிகையும், காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித்தொடர்பாளருமான குஷ்பு தெரிவித்துள்ளார்.

சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியின் போது கவிஞர் வைரமுத்து தன்னை படுக்கைக்கு அழைத்தார் என பரபரப்பான குற்றச்சாட்டை பாடகி சின்மயி முன்வைத்தார்.

இதே போல சிந்துஜா ராஜாராம் என்ற பெண்ணும் வைரமுத்து தன்னிடம் தவறாக பேசியதாக கூறினார்.

இது போல சிலர் வைரமுத்து குறித்து பேசினார்கள்.

இதற்கு பதிலளித்த வைரமுத்து, சின்மயி புகாரில் உண்மையிருந்தால் அவர் வழக்கு தொடரட்டும் என கூறினார்.

இந்நிலையில் திரையுலகை சேர்ந்த சிலர் வைரமுத்து - சின்மயி விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ளனர்.

இதனிடையில் வைரமுத்து குறித்து நடிகையும், காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித்தொடர்பாளருமான குஷ்பு பேசியுள்ளார்.

அவர் கூறுகையில், நான் என் வாழ்க்கையில் பார்த்தவர்களில், வைரமுத்து கண்ணியமான மனிதர்களுள் ஒருவர் என கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்