பிளாட்பார்மில் இருந்தவர் மீது பெட்ரோல் ஊற்றியது ஏன்? குற்றவாளிகளின் பரபரப்பு வாக்குமூலம்

Report Print Fathima Fathima in இந்தியா

சென்னை திருவான்மியூரில் பிளாட்பாரத்தில் படுத்திருந்த நபர் மீது பெட்ரோல் ஊற்றியது குறித்து குற்றவாளிகள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

திருவண்ணாமலையை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி, சென்னையில் கட்டிடத் தொழிலாளியாக பணியாற்றி வந்துள்ளார்.

தினமும் பணி முடிந்ததும் திருவான்மியூர் பகுதி பிளாட்பார்மில் படுத்து தூங்குவது வழக்கம்.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு பெட்ரோல் ஊற்றி எரித்த நிலையில் மீட்கப்பட்டார், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுதொடர்பாக பொலிசார் விசாரணை நடத்தியதில் ஆட்டோவில் வந்த இருவர் இதை செய்தது தெரியவந்தது.

ஆட்டோவின் பதிவு எண்ணை கொண்டு விசாரித்ததில், விஜயராஜா மற்றும் கோவிந்தராஜ் குற்றவாளிகள் என கண்டுபிடிக்கப்பட்டது.

சம்பவதினத்தன்று, இருவரும் குடிபோதையில் இருந்துள்ளனர், கிருஷ்ணமூர்த்தி அருகில் இருந்தவரிடம் கோவிந்தராஜ் ஓசி பீடி கேட்டுள்ளார், அவர் தராததால் அவரை தாக்கவே அதை கிருஷ்ணமூர்த்தி தட்டிக் கேட்டுள்ளார்.

அந்நேரத்தில் விஜயராஜா ஆட்டோவுக்கு பெட்ரோல் ஊற்றிக் கொண்டிருக்க, கோபத்தில் கிருஷ்ணமூர்த்தி மீது பெட்ரோலை ஊற்றியுள்ளார்.

இதில் பீடியிலிருந்த தீ மூலம் உடலில் தீப்பிடித்துள்ளது. இதைப்பார்த்த விஜயராஜாவும் கோவிந்தராஜும் அங்கிருந்து ஆட்டோவில் தப்பியுள்ளனர்.

இந்நிலையில் இருவரையும் கைது செய்த பொலிசார் சிறையில் அடைத்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்