ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் தூக்கிட்டு தற்கொலை

Report Print Fathima Fathima in இந்தியா

தமிழகத்தின் வேலூரில் மகன் இறந்த சோகத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் தற்கொலை செய்து கொண்ட சோக சம்பவம் நடந்துள்ளது.

வேலூரின் குடியாத்தம் அருகே அம்மணாங்குப்பம் கிராமத்தை சேர்ந்த தம்பதி திருவேங்கடம்- பரிமளா.

இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர், மூத்த மகனான நிக்கேஷ் உடல்நிலை பாதிக்கப்பட்ட கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு இறந்து போனார்.

இதனால் சோகத்தில் இருந்துள்ளனர், இந்நிலையில் நிக்கேஷின் பிறந்தநாளன்று முதியோர் இல்லம் சென்று சாப்பாடு வழங்கிவிட்டு வந்த தம்பதியினர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

மகன் இறந்த துக்கம் தாங்காமல் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவரும் இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்