திருமணத்தில் இப்படியொரு ஆச்சரிய நிகழ்வா? பலரையும் வியப்பில் ஆழ்த்திய தமிழர்கள்

Report Print Raju Raju in இந்தியா

தமிழகத்தில் சுற்றுப்புறம் மாசுபடுவதை தவிர்க்க மாட்டு வண்டியில் நடைபெற்ற மணமகள் அழைப்பு நிகழ்ச்சி பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

திருமண நிகழ்வின் போது மாப்பிள்ளை அழைப்பு, மணமகள் அழைப்பு அனைத்தும் கார்களிலேயே நடைபெற்று வருகிறது.

ஆனால் இதற்கு மாற்றாக தமிழகத்தின் கும்பகோணம் அருகில் உள்ள பாபநாசத்தில் ஒரு விடயம் நடைபெற்றது.

அதாவது, மாட்டு வண்டியில் மணமக்கள் அழைப்பு நடைபெற்றது.

சுற்றுப்புறம் மாசுபடுவதை தவிர்க்கவும், பெட்ரோல், டீசல் பயன்பாட்டை குறைக்கும் வகையிலேயே இவ்வாறான புதுமையான முறை கையாளப்பட்டது.

இதில் மணமகனே மாட்டு வண்டியை ஓட்டி வந்த நிலையில் சென்டை மேளம் முழங்க மணமக்கள் அழைப்பு நடைபெற்றது அனைவரையும் கவர்ந்தது.


மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்