சபரிமலை சன்னிதானத்தை நெருங்கும் பெண் பத்திரிக்கையாளர்! ஐயப்ப பக்தர்கள் போராட்டம்

Report Print Fathima Fathima in இந்தியா

சபரிமலை சன்னிதானத்தை நெருங்கும் பெண் பத்திரிக்கையாளர் கவிதா நிலப்பந்தல் அருகே இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் என செல்லலாம் என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

இருப்பினும் ஐயப்ப பக்தர்கள், ஆர்எஸ்எஸ் என பல்வேறு கட்சியினர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று நியூயார்க் டைம்ஸ் செய்தியாளர் சுஹாசினி, சபரிமலை சன்னிதானத்தை நோக்கி முன்னேற தடுத்து நிறுத்தப்பட்டார்.

இன்று காலை பெண் பத்திரிக்கையாளர் கவிதா பொலிஸ் பாதுகாப்புடன் சென்று கொண்டிருக்கிறார்.

தற்போது நிலப்பந்தல் அருகே இருக்கும் கவிதாவுக்கு எதிராக பக்தர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர், அவர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் பொலிசார் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்