திருமணத்துக்கு முன்னரே கர்ப்பம்: பிறந்த அன்றே குழந்தை கொலை... தாயின் வெறிச்செயலின் பின்னணி

Report Print Raju Raju in இந்தியா

சென்னையில் திருமணத்திற்கு முன்பே குழந்தை பெற்றதால் அந்த குழந்தையை கொலை செய்த தாய், காதலன் உள்ளிட்ட மூன்று பேரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

வேளச்சேரி பிரதான சாலையில் உள்ள குப்பை தொட்டியில் கடந்த மாதம் 17ம் திகதி பிறந்து ஒரு நாளே ஆன பெண் குழந்தை தொப்புள் கொடியுடன் இறந்து கிடந்தது.

குழந்தையை மீட்ட பொலிசார் சம்பவம் குறித்து தீவிரமாக விசாரித்து வந்தனர்.

தீவிர விசாரணைக்கு பின், நேற்று ஜெபராஜ் (25), வசந்தி (22), அவளது தாய் விஜயா (50) ஆகியோரை கைது செய்தனர்.

இது குறித்து பொலிசார் கூறுகையில், ஜெபராஜ், வசந்தி இருவரும் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்த போது காதலித்தனர்.

சந்தர்ப்பம் கிடைத்த போது உல்லாசமாக இருந்ததால் வசந்தி கார்ப்பம் ஆனார்.

ஏழு மாதம் வரை கர்ப்பத்தை வீட்டிற்கு தெரியாமல் மறைத்தார். ஒரு கட்டத்தில், விஜயாவுக்கு தெரிந்தது. உறவுகளுக்கு தெரிந்தால் அவமானம் என விஜயாவும் யாரிடமும் கூறவில்லை.

வசந்தியை வெளியே அனுப்பாமல் குழந்தை பிறக்கும் வரை வீட்டில் வைத்திருந்தாள். குழந்தை பிறந்ததும் கொலை செய்து யாருக்கும் தெரியாமல் வெளியே வீசிவிட வேண்டும் என, விஜயா, வசந்தி, ஜெபராஜ் சேர்ந்து முடிவு செய்தனர்.

பின்னர் நீர் நிரம்பிய பக்கெட்டில் போட்டு குழந்தையை மூவரும் கொன்றனர்.

குழந்தை இறந்ததும், குப்பைதொட்டியில் வீசினர். அக்கம்பக்கத்தில் விசாரித்த போது வசந்தி கர்ப்பம் ஆனது தெரியவந்தது.

குழந்தை குறித்து கேட்டபோது, முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினார்.

தீவிர விசாரணைக்கு பின் தான் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார் என தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்