சின்மயியிக்கு பைத்தியம் பிடித்துவிட்டது: பிரபல நடிகை தாக்கு

Report Print Deepthi Deepthi in இந்தியா

பெண்களுக்கு தங்களுக்கு நேர்ந்த பாலில் வன்கொடுமைகள் குறித்து அந்த நிமிடத்திலேயே குரல் கொடுக்க வேண்டும் என நடிகை சோனியா கூறியுள்ளார்.

காலம் கடந்து செல்வது என்பது தேவையற்ற ஒன்று. அந்த வகையில், சின்மயி கூறிய பாலியல் புகாருக்கு நான் எதிர்ப்பு தெரிவிக்கிறேன்.

ஒவ்வொரு பெண்களும் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் பாலியல் தொந்தரவுகளை கடந்துதான் வந்திருக்கிறார்கள்.

10 வருடங்களாக தனது மனதுக்குள் பூட்டி வைத்திருந்த வைரமுத்து மீதான குற்றச்சாட்டை தற்போது கூறியிருக்கிறார் சின்மயி. ஆனால், கடந்த சில வருடங்களாக அவரது பாடலில் பாடியுள்ளார், நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டுள்ளார்.

சமீபத்தில் கூட ஒரு புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார். உங்களுக்கு அறவே பிடிக்காத ஒரு நபர், உங்களை இழிவான நினைத்த நபர் என்றால், எதற்காக அவருடன் பயணிக்கிறீர்கள், சற்று தள்ளியிருக்கலாம்.

மீடூவுக்காக ஒரு குழுவை அமைக்க நடிகர் சங்கம் முடிவு செய்துள்ளோம். ஆண்களும் பாதிக்கப்பட்டுள்ளார்கள், அதுகுறித்து விசாரிப்போம் என நடிகை சோனியா கூறியுள்ளார்.

இப்படி, காலம் தாழ்த்தி குரல் கொடுக்கும் பின்னல்களுக்கு பைத்தியம் பிடித்திருக்கிறது என கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்