இளம் மொடல் அழகி கொலை... பெட்டிக்குள் திணிக்கப்பட்ட சடலம்: இளைஞரின் பகீர் வாக்குமூலம்

Report Print Arbin Arbin in இந்தியா

இந்தியாவின் மராட்டிய மாநிலத்தில் பாலியல் உறவுக்கு மறுத்த இளம் மொடலை இளைஞர் ஒருவர் கொடூரமாக கொலை செய்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த கொலை வழக்கு தொடர்பில் 19 வயதான முஸம்மில் சயித் என்பவரை மும்பை பொலிசார் கைது செய்துள்ளனர்.

மும்பை நகரின் அந்தேரி பகுதியில் நடந்த இந்த கொலை வழக்கு தொடர்பில் கைதான இளைஞரிடம் பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சம்பவம் நடந்த அன்று முஸம்மில் தமது தோழியும் மொடலுமான மான்ஸி தீக்ஸிதை தமது குடியிருப்புக்கு வர அழைப்பு விடுத்துள்ளார்.

இந்த நிலையில் தனிமையை பயன்படுத்திக் கொள்ள நினைத்த இளைஞர் முஸம்மில், மான்ஸியிடம் பாலியல் உறவுக்கு கோரியுள்ளார்.

இதற்கு மறுப்பு தெரிவித்த மான்ஸியை வாக்குவாதத்தின் இடையே நாற்காலியால் தலையில் தாக்கியுள்ளார்.

இதில் சம்பவயிடத்திலேயே மரணமடைந்த மொடலை, பெரிய பெட்டி ஒன்றில் திணித்து மலாடு பகுதியில் உள்ள தொழில் வளாகம் அருகே மறைவு செய்துள்ளார்.

இந்த விவகாரத்தில் சடலத்தை கைப்பற்றிய பொலிசார் இளைஞரின் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.

மேலும் உடற்கூறு சோதனையில், பாலியல் உறவு கொண்டதற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை எனவும், தலையில் பலமாக தாக்கப்பட்டுள்ளதும், கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளதும் தெரியவந்துள்ளது.

மிலந்த் நகரில் உள்ள முஸம்மிலின் குடியிருப்பிலே இருவரும் அடிக்கடி சந்தித்து வந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்