சின்மயி பற்றி அன்று வைரமுத்து சொன்னது என்ன தெரியுமா?

Report Print Fathima Fathima in இந்தியா

தான் திரைத்துறைக்குள் நுழைந்து 30 ஆண்டுகள் நிறைவடைந்தது கொண்டாடும் விதமாக பிரபல வானொலியில் பாடல்கள் ஒலிபரப்பானது.

அவர் தெரிவு செய்த 200 பாடல்களுக்கும் முன்னுரை ஒன்றையும் எழுதியிருந்தார், அதில் சின்மயி பாடிய “தெய்வம் தந்த பூவே” பாடலும் ஒன்று.

இந்த பாடலின் முன்னுரையாக வைரமுத்து குறிப்பிட்டது இதுதான்,

''இப்போது நீங்கள் கேட்க விரும்பும் பாட்டு, எனக்கு ஐந்தாம் தேசிய விருது பெற்றுத்தந்த பாட்டு. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் இரண்டாம் தேசிய விருது பெற்றுத்தந்த, 'சின்னச் சின்ன ஆசை' பாடலுக்கும் ஐந்தாம் தேசிய விருது பெற்ற இந்தப் பாடலுக்கும் ஓர் ஒற்றுமை உண்டு.

சின்னச் சின்ன ஆசை பாடலை ஒலிப்பதிவுசெய்து முடித்ததும், ஏ.ஆர்.ரஹ்மான் இந்தப் பாட்டை போட்டுக் காட்டி சொன்னார். 'ஒரு புதிய பாடகியை அறிமுகம் செய்திருக்கிறேன். இந்தக் குரல் நன்றாக இருந்தால் இதையே வைத்துக்கொள்ளலாம். அல்லது பெரும் பாடகி யாரையாவது அழைத்து ஒலிப்பதிவு செய்யலாம்' என்றார். சின்னச் சின்ன ஆசை பாடலை கேட்டுவிட்டுச் சொன்னேன்.

'தயவு செய்து மாற்றாதீர்கள். இந்தப் பாட்டுக்கென்றே பிறந்த குரல் மின்மினியின் குரல். அப்படியே இருக்கட்டும்' எனச் சொன்னேன். அதே நிலைதான் இந்தப் பாட்டுக்கும் நிகழ்ந்தது. இந்தப் பாடலை போட்டுக் காட்டிவிட்டு ஏ.ஆர்.ரஹ்மான் சொன்னார், 'நன்றாக இருக்கிறதா, மாற்றலாமா' என்று.

நான் சொன்னேன், 'இந்தப் பாடலை இதைவிடச் சிறந்த மென்மையான குரல் பாடிவிட முடியும் என எனக்குத் தோன்றவில்லை. தயவுசெய்து மாற்றாதீர்கள். சின்மயி குரலே இருக்கட்டும்' என்றேன். என்ன ஆச்சர்யம் இந்தப் பாடலைப் பாடிய சின்மயிக்கு தேசிய விருதே கிடைத்தது. இரட்டைத் தேசிய விருதுகள் பெற்றுத்தந்த பாட்டு, 'தெய்வம் தந்த பூவே'.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்