தனியார் பள்ளி உரிமையாளருக்கு வந்த சக்திவாய்ந்த 'பார்சல் வெடிகுண்டு': விரைந்த பொலிஸ் பட்டாளம்

Report Print Vijay Amburore in இந்தியா

குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் தனியார் பள்ளி உரிமையாளருக்கு வந்த பார்சலில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் ஸ்ரீ கிருஷ்ணா என்ற பள்ளியை நடத்தி வருபவர் Vitthal Dobaria (48). இவருக்கு கடந்த 12-ம் தேதியன்று மர்ம நபர் ஒருவர் பார்சல் வந்திருப்பதாக கொடுத்துள்ளார். அந்த பார்சலில் 'நன்றி ஆசிரியரே' என எழுதப்பட்டிருந்துள்ளது.

சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழுவதும் Dobaria பிசியாக இருந்ததால், 14-ம் தேதி மாலை தன்னுடைய குடும்பத்துடன் அமர்ந்து பார்சலை திறந்து பார்த்துள்ளார். அப்போது மேலே ஒரு சிறிய வகையிலான சாமியின் சிலை இருந்துள்ளது. ஆனால் அதன் பின் பக்கத்தில் வயர் மற்றும் பேட்டரிகள் பொருத்திய பாம் இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.

இதனையடுத்து கொடுக்கப்பட்ட தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த குண்டு கண்டுபிடிப்பு மற்றும் அகற்றும் குழுவை சேர்ந்த அதிகாரிகள், வெடிகுண்டை சோதனை செய்து வெற்றிகரமாக நீக்கினர்.

பின்னர் இந்த சம்பவம் குறித்து பேசிய பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர், வந்திருந்த பார்சல் எந்தவிதமான சரியான நடைமுறைகளை பின்பற்றி அனுப்பி வைக்கப்பட்டதில்லை. அதை செய்தவர் தான், நேரில் கொண்டு வந்து கொடுத்திருக்க வேண்டும். அவருக்கு ஆசிரியரின் மீது ஏதேனும் முன்விரோதம் இருந்திருக்கலாம். அதனால் தான் குடும்பத்தோடு அவரை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள இரண்டு குழுக்களை அமைத்துள்ளோம். இந்த வெடிகுண்டு இரண்டு மாடி கட்டிடத்தை தரைமட்டமாக்கும் அளவிற்கு மிகவும் சக்திவாய்ந்தது என கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்