படுக்கையை பகிர்வது ஆண்களின் தவறு இல்லை! MeToo க்கு எதிராக பேசிய பிரபல நடிகை ஆண்ட்ரியா

Report Print Santhan in இந்தியா

பிரபல திரைப்பட நடிகையான ஆண்ட்ரியா படுக்கையை பகிர்வது ஆண்களது குற்றம் மட்டுமில்லை என்று மீ டூவுக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளார்.

பாடகியான சின்மயி, வைரமுத்து மீது வைத்த குற்றச்சாட்டுக்கு பின்னர் MeToo என்ற ஹேஷ் டேக் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவியது. பெரும்பாலானோர் சின்மயிக்கு ஆதரவாகவே தங்களுடைய கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் திரைப்பட நடிகையான ஆண்ட்ரியா MeToo குறித்து கேட்ட போது, சர்ச்சைக்குரிய பதில் ஒன்றை அளித்துள்ளார்.

அதில், எனக்கு இது போன்ற அனுபவம் இல்லை. தான் ஒருவருடன் டேட்டிங் செல்கிறேன் என்றால் எனக்கு அவரை பிடித்திருக்கிறது என்று அர்த்தம், எனக்கு மட்டுமின்றி அவருக்கும் அதில் பிடித்திருக்கிறது என்று தான் அர்த்தம், அது தான் உண்மை.

ஒருவருடைய படுக்கையில் யார் இருக்கின்றார்கள் என்பது எல்லாம் இருவருக்கும் இடையேயான தனிப்பட்ட விடயம், படுக்கையை பகிர்வது ஆண்களின் குற்றம் மட்டமல்ல, தங்களது வேலைக்காக பெண்கள் படுக்கையை பகிரவிரும்பவில்லை என்றால், யாரும் அவர்களை கேட்கமாட்டார்கள்.

ஆனால் நாம் மற்றவர்களை குற்றம் சாட்டுகிறோம், பெண்கள் முதலில் தன் மீது நம்பிக்கை வைக்க வேண்டும், இல்லையென்றால் ஆண் மட்டுமல்ல, எல்லோரும் கிட்டே நெருங்கத்தான் செய்வார்கள் என்று கூறியுள்ளார்.

ஆண்ட்ரியாவின் இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தாலும், பலரும் இதற்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்