தரம் தாழ்ந்த வார்த்தைகளால் என்னை கிண்டல் செய்யாதீர்கள்! பெண் வேடமிட்டு மியூசிக்லி செய்த இளைஞரின் கலங்கவைக்கும் முடிவு

Report Print Deepthi Deepthi in இந்தியா

சென்னையில் பெண் வேடமிட்டு மியூசிக்லி செய்து வீடியோ வெளியிட்ட இளைஞரை கிண்டல் செய்த காரணத்தால் மனமுடைந்து தற்கொலை செய்துகொண்டார்.

கலையரசன். தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார்.

ஆப்பை பயன்பபடுத்தி பல சினிமா பாடல்களுக்கும் பெண்கள் போல வேடமிட்டு மியூசிக்லி செய்து வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

இவரது வீடியோவை பார்த்து நண்பர்கள் பலரும் கிண்டல் செய்துள்ளனர். என்னை கிண்டல் செய்யாதீர்கள்... உங்களுக்கு விருப்பமென்றால் பாருங்கள், இல்லையென்றால் என்னை பிளாக் செய்துவிட்டு போங்கள் என கலையரசன் கூறியும், அதனை கேட்காத நண்பர்கள் தொடர்ந்து கிண்டல் செய்துள்ளனர்.

என்னைத் திட்டுபவர்களை நீங்கள் பதிலுக்குத் தரம் தாழ்ந்த வார்த்தைகளால் திட்டாதீர்கள். நீங்கள் திட்டுவது அவர்களைக் கூறுவதுபோல் இல்லை என்னையும் திட்டுவதுபோல்தான் உள்ளது.

அவர்களுக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம் உள்ளது. அவர்களிடம் எடுத்துச் சொல்லுங்கள் தகாத வார்த்தைகள் வேண்டாம் என்று சொல்லுங்கள் என உருக்கமா கூறியுள்ளார்.

ஆனால் கேலி ஒரு கட்டத்தில் உச்சிக்கு செல்ல மனமுடைந்து இறுதியில் பொறுத்துக்கொள்ள முடியாத கலையரசன் கடந்த 12-ஆம் தேதி மின்சார ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்