வைரமுத்துவின் விக்கிபீடியா பக்கத்தை மோசமாக எடிட் செய்த நபர்கள்

Report Print Deepthi Deepthi in இந்தியா

தமிழ்நாட்டின் அடையாளம் என கூறப்பட்டு வந்த கவிஞர் வைரமுத்து அவர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து அவர் மோசமான விமர்சனங்களுக்கு ஆளாகியுள்ளார்.

மீடூ என்ற எழுச்சி மூலம் பாடகி சின்மயி இவர் மீது வைத்துள்ள பாலியல் குற்றச்சாட்டுக்கு ஒரு சில தரப்பில் எதிர்ப்பும், பெண்கள் சிலர் ஆதரவும் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும், தமிழகத்தில் மிகப்பெரிய அந்தஸ்துடன் வலம் வந்த வைரமுத்துவை சமூகவலைதளங்களும், ஊடகங்களும் விவாத பொருளுக்கு ஆளாக்கியுள்ளனர்.

தன்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு பொய்யானவை என்றும் ஆதாரங்களை திரட்டி வைத்துள்ளேன் என வைரமுத்து அறிவித்த நிலையில், வைரமுத்துவுக்கான விக்கிபீடியா பக்கத்தில், அவரை மோசமாக சிலர் எடிட் செய்து வைத்துள்ளார்கள்.

இதுவரை அவரது சிறப்புகளை மட்டுமே கூறிவந்த விக்கிபீடியாவில், யாரோ சிலர் மோசமாக எடிட் செய்துவைத்துள்ளார்கள்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்