18 ஆம் படியில் கைவைத்த நடிகை! அன்றே அப்படி: வெளியான வீடியோவால் சர்ச்சை

Report Print Deepthi Deepthi in இந்தியா

1985 ஆம் ஆண்டில் தமிழ் திரை உலகில் முன்னணி கதாநாயகியாக இருந்த நடிகை ஜெயஸ்ரீ தான் சபரிமலையில் 18 ஆம் படியில் கைவைத்து நடித்ததற்காக சர்ச்சையில் சிக்கினார்.

1986 ஆம் ஆண்டில் வெளியான நம்பினார் கெடுவதில்லை என்ற ஐயப்பன் பக்தி படம் ஒன்றின் படப்பிடிப்பு சபரிமலையில் திருவிதாங்கூர் தேவசம் போர்டு அனுமதியுடன் நடந்துள்ளது.

அப்போது ஐய்யப்பனை வேண்டி நடிகை ஜெயஸ்ரீ 18 ஆம் படியின் முன்பு பாடல் காட்சி ஒன்றில் நடித்தார்.

உண்மையிலேயே மாலைபோட்டு வந்திருந்த பக்தர்களை காத்திருக்கவைத்து விட்டு நடிகை ஜெயஸ்ரீயின் பாடல் காட்சி படமாக்கப்பட்டது.

அப்போதெல்லாம் கன்னிப்பெண்களுக்கு சபரிமலைக்குள் அனுமதி இல்லை அதுவும் 18 ஆம் படி இருக்கும் பகுதிக்குள் நுழையவே விடமாட்டார்கள் என்ற சூழலில் நடிகை ஜெயஸ்ரீ 18 ஆம் படியில் கைவைத்து நடித்தது சர்ச்சை கிளப்பிய உள்ளது.

இதையடுத்து படப்பிடிப்புக்கு அனுமதி அளித்த தேவசம் போர்டு ,படபிடிப்பு குழுவுக்கு 7 ஆயிரத்து 500 ரூபாயை அபராதமாக விதித்ததாக அப்போது உடனிருந்த சினிமா கலைஞர்கள் தெரிவித்தனர்.

தற்போது, இந்த வீடியோ வைரலாகியுள்ளது.

இன்று, நீதிமன்றமும் கேரள அரசும் அனுமதி அளித்துள்ள நிலையில், சபரிமலைக்கு செல்ல முயன்ற பெண் பக்தர்கள் தடுக்கப்பட்டதால் அங்கே கலவர சூழல் உருவாகி 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஆனால் 1986 ஆம் ஆண்டு படப்பிடிப்புக்கு எந்த அடிப்படையில் நடிகைகளை தேவசம் போர்டு அனுமதித்தது என்பதே பலரது கேள்வியாக உள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்