குற்றம் நிரூபிக்கப்பட்டால் தூக்கில் தொங்கிடுவேன்: பரபரப்பை கிளப்பிய பிரபல இயக்குனர்

Report Print Arbin Arbin in இந்தியா

பெண் கவிஞரும் இயக்குனருமான லீனா மணிமேகலை தன் மீது சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் அந்த இடத்திலேயே தூக்கில் தொங்குவேன் என இயக்குனர் சுசி கணேசன் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாலியல் அத்துமீறல்களை அம்பலப்படுத்தும் மீ டூ இயக்கம் கலை, அரசியல் என பல்வேறு துறைகளில் புயலை கிளப்பியுள்ளது.

தமிழகத்தில் பத்திரிகையாளர் சந்தியா மோகன், பாடகி சின்மயி உள்ளிட்ட சிலர் தங்களுக்கு நேர்ந்த துயரங்களையும், பலர் இவர்களுடன் பகிர்ந்துகொண்ட தகவல்களையும் சமூக ஊடகங்களில் வெளியிட்டு பரபரப்பை கிளப்பினர்.

இதில், பாடலாசிரியர் வைரமுத்து தம்மை படுக்கைக்கு அழைத்தார் எனவும், இளம்பெண் ஒருவருக்கு ஆபாச கவிதையை தொலைபேசியில் பாடினார் எனவும் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் பெண் கவிஞரும், இயக்குனருமான லீனா மணிமேகலை, சக இயக்குனர் சுசி கணேசன் மீது பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

காரில் ஒன்றாக சென்றபோது, பாலியல் ரீதியாக அத்துமீறியதாக லீனா மணிமேகலை கூறியதை மறுத்துள்ள சுசி கணேசன்,

தன் மீது எந்த தவறும் இல்லை என்பதை நிரூபிக்க தான் தயார் எனவும், இது தமக்கு அவமானமாக உள்ளது எனறும் அவர் தெரிவித்துள்ளார்.

தன் மீது எந்த தவறும் இல்லை எனவும் அதனை நீதிமன்றம் வரை கொண்டு சென்று நிரூபிக்க தயார் எனவும் தெரிவித்த சுசி கணேசன்,

அவ்வாறு தான் குற்றம் செய்ததாக நிரூபிக்கப்பட்டால் அந்த இடத்திலேயே தூக்கில் தொங்குவேன் என தெரிவித்துள்ளார்.

இயக்குனர் சுசி கணேசன் இவ்வாறு தெரிவித்திருப்பது அவரது குடும்பத்தினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்