தமிழ் திரையுலகில் இருப்பவர்கள் செத்துபோயிட்டீங்களா? பெண் இயக்குனர் சரமாரி கேள்வி

Report Print Santhan in இந்தியா

பிரபல பெண் இயக்குனரான லீனா மணி மேகலை தமிழ் திரையுலகில் இருப்பவர்கள் செத்து போயிட்டிங்களா அல்லது பயந்து ஒளிஞ்சுகிட்டீங்களா என்று ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார்.

பிரபல இயக்குனரான சுசி கணேசன் தன்னை காரில் வைத்து பலாத்காரம் செய்ய முயன்றதாக பெண் இயக்குனர் மணிமேகலை தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

இதற்கு சுசிகணேசன் மறுப்பு தெரிவித்ததோடு, லீனா மணிமேகலைக்கு எதிராக அவதூறு வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த லீனா,இரண்டு வருடங்களுக்கு முன்பு எனக்கும் இயக்குனர் சுசி கணேசனால் பாலியல் துன்புறுத்தல் ஏற்பட்டது.

அதுகுறித்து கூறினால், நான் பொய்சொல்வதாக கூறும் சுசி கணேசன், உண்மையை மறைக்க பொய் மேல் பொய்களை சொல்லி வருகிறார்.

பெண்கள் பாலியல் தொந்தரவுக்கு உள்ளாகும் போது, அவர்களுக்கு பலர் ஆதரவு தருவதில்லை. மூத்த நடிகர்களான ரஜினி, கமல் போன்றவர்கள் மெளனம் காப்பது குற்றம் செய்தவர்களுக்கு ஆதரவாக இருப்பதாக அமைகிறது என்று கூறினார்.

இதைத் தொடர்ந்து அவர் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், தமிழில் கதை கவிதை எல்லாம் எழுதிட்டிருக்கிற படைப்பாளிகள், பட இயக்குநர்கள், கருத்தாளர்கள் எல்லாம் #metoo இயக்கம் வந்தபிறகு செத்து கித்து போயிட்டீங்களா? இல்ல ஓடி ஒளிஞ்சிருக்கீங்களா? உங்க மெளனத்தை பயம் என எடுத்துக்கொள்ளலாமா? எனக் கேள்வி எழுப்பி உள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்