சிதைந்துபோன இசையமைப்பாளரின் குடும்பம்: அன்று நடந்தது என்ன?

Report Print Deepthi Deepthi in இந்தியா

இசையமைப்பாளர் பாலா பாஸ்கர் மற்றும் அவரது மனைவி தேஜஸ்வனி கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் நடந்த கார் விபத்தில் உயிரிழந்தனர்.

இவரது மனைவி லஷ்மி தற்போது வரை தீவிர சிகிச்சை எடுத்து வருகிறார். காதல் திருமணம் செய்து 16 ஆண்டுகளுக்கு பிறகு பிறந்த குழந்தை, அழகிய குடும்பம் என இவர்களது வாழ்க்கை சிதைந்துபோனது.

பாலாபாஸ்கரின் மரணம் கேரளாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில், பாலாபாஸ்கர் குடும்பத்துடன் விபத்தில் சிக்கிய அன்று என்ன நடந்தது என அவரின் கார் ஓட்டுநர் அர்ஜூன் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

அன்றைய தினம் என்ன நடந்தது என்று முழுவதும் நினைவில்லை. திருச்சூரில் இருந்து கொல்லம் வரை நான் தான் காரை ஓட்டினேன்.

கொல்லத்தில் உள்ள ஜூஸ் கடையில் காரை நிறுத்தினோம். நான் சென்று ஜூஸ் வாங்கி வந்தேன். பிறகு பின் சீட்டில் அமர்ந்துவிட்டேன். அதற்கு பிறகு பாலாபாஸ்கரே காரை ஓட்டினார்.

முன் இருக்கையில் அவரது மனைவியும், மகளும் அமர்ந்து இருந்தனர். அதற்கு பிறகு நடந்தது நினைவில்லை என்று கூறியுள்ளார்.

அர்ஜூன் குறிப்பிட்ட ஜூஸ் கடையிலோ அல்லது அதன் அருகிலோ ஏதாவது சிசிடிவி கமெரா இருந்தால் விசாரணைக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்