மனைவியை நடுரோட்டில் வைத்து வெட்டி கொலை செய்த கணவர்

Report Print Vijay Amburore in இந்தியா

மதுரை மேலூர் அருகே பிரிந்து வாழ்ந்த மனைவியை பேருந்து நிறுத்தத்தில் வைத்தே கணவர் வெட்டிக்கொலை செய்துள்ள கொடூர சம்பவம் நடந்தேறியுள்ளது.

மேலூர் அருகே அழகிரிபட்டியைச் சேர்ந்தவர் பிரபு (32). இவர் கடந்த 3 வருடங்களுக்கு முன்னர் ராதிகா என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டார்.

டெல்லியில் உணவகம் ஒன்றில் பணியாற்றி வந்த பிரபு, தனியாக உணவகம் ஒன்று ஆரம்பிக்க வேண்டும் என ராதிகாவின் நகைகளை அடமானம் வைத்து கடையை ஆரம்பித்துள்ளார். ஆனால் அதில் நஷ்டம் ஏற்பட்டதால், கணவன்-மனைவி இருவருக்குமிடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.

இதனால் கணவனை பிரிந்த ராதிகா பெற்றோருடன் சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளார். மேலும் திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். இதனால் பிரபு மேலும் கோபத்தில் இருந்துள்ளார்.

பலமுறை ராதிகாவை சந்தித்து சமாதானம் பேச முயற்சி செய்தும் தோல்வியில் முடிந்ததால் ஆத்திரமடைந்த பிரபு நேற்று பணி முடிந்து பேருந்துக்காக காத்துக்கொண்டிருந்த ராதிகாவை சரமாரியாக அரிவாளால் வெட்டியுள்ளார். இதில் சுருண்டு தரையில் விழுந்த ராதிகா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்த வழக்கு பதிவு செய்த பொலிஸார் தற்போது பிரபுவை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்