வைரமுத்து மீதுள்ள கோபம்... சின்மயிக்கு ஆதரவா?

Report Print Deepthi Deepthi in இந்தியா
274Shares

ஆண்டாளை விமர்சித்த காரணத்தால் வைரமுத்து மீது தனிப்பட்ட கோபத்தை காட்டுகிறீர்களா? என்ற கேள்விக்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் பேட்டியளித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட பெண்கள் தைரியமாகக் குரல் கொடுக்க முன்வருகிறார்கள். இது வரவேற்கப்பட வேண்டிய விஷயம்.

தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். அப்போதுதான், இனிமேல் தவறு செய்ய ஆண்கள் அஞ்சுவார்கள். பணியிடம் உட்பட எல்லா இடங்களிலும் பெண்களின் பாதுகாப்பு உறுதிசெய்யப்படும்.

பெண்களின் திறமைக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கப்படும். பாடகி சின்மயி மட்டுமல்ல, சிந்துஜா என்ற பெண்ணும் வைரமுத்து மீது குற்றம் சாட்டியிருக்கிறார். சந்தேகங்கள் அதிகரிக்கின்றன. அதனால்தான் அப்படியொரு கருத்தைப் பதிவிட்டேன்.

விசாரணை நடைபெற்று, உண்மை வெளிவர வேண்டும். ஆண்டாள் எங்கள் சொந்தத் தாய். அவரை இழிவுப்படுத்தினால் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? ஆண்டாள் விவகாரத்தில் வைரமுத்து மீது எங்களுக்குக் கோபம் இருக்கிறதுதான். அதன் வெளிப்பாடாக, சின்மயியின் குற்றச்சாட்டுக்கு நாங்கள் கருத்துச் சொல்லவில்லை.

இந்த விவகாரத்தில் எந்த உள்நோக்கமும் எங்களுக்கு இல்லை என கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்