அவர் வக்கிர புத்தி கொண்டவர்! அருவருப்பாக இருக்கும்: குஷ்பு சொன்னதால் கேட்டுக்கொண்டேன்: நடிகை ராணி பேட்டி

Report Print Deepthi Deepthi in இந்தியா
924Shares

நந்தினி தொடரில் தான் நடிக்கும்போது நடிகர் சண்முகராஜன் தனக்குப் பாலியல் தொல்லை கொடுத்தாக பொலிசில் புகார் கொடுத்துவிட்டு அதைத் திரும்பப் பெற்றிருக்கிறார் நடிகை ராணி.

தொடரில் நடிக்கும்போது சண்முகராஜன் என்கிட்ட ஓவர் அட்வான்டேஜ் எடுத்துக்குவார். தேவையில்லாம என் கையைப் பிடிப்பார். இதெல்லாம் எனக்கு அருவருப்பைக் கொடுக்கும்.

இந்த மாதிரியெல்லாம் என்கிட்ட நடந்துக்கிற வேலையெல்லாம் வெச்சுக்காதீங்கனு கண்டிச்சிருக்கேன். ஆனா, அவர் திருந்தியபாடில்லை.

சண்முகராஜனின் இந்தச் செயலால் என் கணவர் ரொம்ப வருத்தப்பட்டார். உடனே, அருகில் இருக்கும் காவல் நிலையத்தில் புகார் அளித்தோம்.

சண்முகராஜன் மட்டுமல்ல, அந்த சீரியலின் இயக்குநர் ராஜ்கபூர் மீதும் புகார் கொடுத்திருந்தேன். இவர் தொடரில் நடிக்கும் பெண்களைக் கேவலமா நடத்துவார். கொச்சையான வார்த்தைகளால் திட்டுவார்.

நந்தினி தொடர் யூனிட்டில் இவங்க ரெண்டும் பேரும் வக்கிர புத்தி கொண்டவங்க. இவங்க ரெண்டு பேரும் சீரியலிலிருந்து விலகணும் என கூறியுள்ளார்.

நந்தினி தொடரை நம்பி கிட்டதட்ட நூறு குடும்பங்களுக்கு மேலே இருக்கின்றன. நான் கொடுத்த புகார் காரணமாக அந்த தொடரில் வேலை பார்க்கும் யாருக்கும் எந்தவொரு பிரச்னையும் வரக்கூடாது.

இதைப் பற்றி குஷ்பு அக்காவே என்கிட்ட எடுத்துச் சொன்னாங்க. அதுமட்டுமல்லாம நடிகர் சங்கத்தில் இதுபற்றிப் புகார் கொடுக்கப் போவதாகவும் சொன்னாங்க.

அதனால்தான் புகாரை வாபஸ் வாங்கினேன் என ராணி கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்