14 வருஷம் ஆச்சு... கைவிரித்த வழக்கறிஞர்கள்: விரைவில் முடிவெடுக்கும் சின்மயி!

Report Print Arbin Arbin in இந்தியா
895Shares

பாலியல் புகாரில் சிக்கியிருக்கும் பாடலாசிரியர் வைரமுத்து மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என சின்மயி தெரிவித்திருந்த நிலையில் தற்போது சட்ட வல்லுநர்கள் கைவிரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பணியிடங்களில் பெண்களுக்கு இழைக்கப்படும் பாலியல் கொடுமைகளை தற்போது மீ டூ என்ற இயக்கம் மூலம் அவர்கள் வெளியிட்டு வருகின்றனர்.

இது தற்போது உலக அளவில் புயலைக் கிளப்பி வருகிறது. இந்நிலையில் கவிஞர் வைரமுத்து மீது சின்மயி பாலியல் குற்றச்சாட்டு எழுப்பியிருந்தார்.

இதற்கு பதிலடி கொடுத்த வைரமுத்து, தானும் ஆதாரங்களைத் திரட்டி வைத்திருப்பதாகவும், வழக்கை எதிர்கொள்ள தயாராக இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

இது குறித்து கருத்து கூறும் பலர் சின்மயி இத்தனை ஆண்டுகளாக ஏன் இதை மறைத்தார்? என்றும்,

சின்மயி சட்டப்படி நடவடிக்கை எடுக்க ஏன் புகார் கூறவில்லை என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இதனிடையே, பாலியல் குற்றச்சாட்டு குறித்து வழக்கறிஞர்களுடன் சின்மயி ஆலோசனை நடத்தியதாகவும், ஆனால், ஆதாரம் இல்லாமல், இந்த விவகாரத்தில் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க முடியாது என அவர்கள் கூறிவிட்டதாகவும் சின்மயி தரப்பில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்