பட்டப்பகலில் இரட்டைக் கொலை: பழிக்குப் பழியாக நிகழ்ந்த சம்பவத்தால் பரபரப்பு

Report Print Arbin Arbin in இந்தியா
181Shares

தமிழகத்தின் ராமநாதபுரம் மாவட்டத்தில் நீதிமன்ற வளாகத்திலேயே 2 பேர் வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் அருகே வாழாந்தரவையில் 2 மாதங்களுக்கு முன் அரங்கேறிய இரட்டைக்கொலையில் அப்பகுதியைச் சேர்ந்த கார்த்திக், ஓம் சக்தி நகரைச் சேர்ந்த விக்கி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

தற்போது ஜாமீனில் வெளியே வந்திருக்கும் இவர்கள் செவ்வாயன்று ராமநாதபுரம் குற்றவியல் நீதிமன்றத்தில் கையெழுத்திட்டு விட்டு புறப்பட்டனர்.

நீதிமன்றம் அமைந்துள்ள அந்த வளாகத்தில், நீதிபதிகள் குடியிருப்பு, மாவட்ட ஆட்சியர் அலுவலகம், காவல்துறை எஸ்.பி. அலுவலகம் ஆகியவை அமைந்துள்ளன.

இந்நிலையில், கார்த்திக், விக்கி ஆகியோர் நீதிபதிகள் குடியிருப்பின் அருகே நடந்து சென்றபோது, 7 பேர் கொண்ட கும்பல், இருவரையும் சுற்றிவளைத்து பெட்ரோல் குண்டை வீசி நிலைகுலையச் செய்துள்ளனர்.

பின்னர் அரிவாளால் 2 பேரையும் சரமாரியாக வெட்டிக் கொலை செய்துவிட்டு அந்த கும்பல் தப்பியோடியுள்ளனர்.

இதையறிந்த கேணிக்கரை பொலிசார், கார்த்திக், விக்கி ஆகியோரின் உடல்களை கைப்பற்றி, ராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பினர்.

நீதிமன்றம், ஆட்சியர் அலுவலகம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் உள்ளிட்டவை அமைந்துள்ள வளாகத்தில் பட்டப்பகலில் அரங்கேற்றப்பட்ட இந்த துணிகர கொலை குறித்து பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொலையான இருவரும் பழிக்குப்பழியாக கொல்லப்பட்டனரா, வேறு ஏதேனும் காரணமா என பொலிசார் விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில், இரட்டைக்கொலையைச் செய்ததாக வாழாந்தரவையைச் சேர்ந்த ரூபன், முருகன், அர்ஜூன், பாஸ்கரன், முருகேசன் என்ற 5 பேர் பரமக்குடி அருகே நயினார்கோவில் காவல் நிலையத்தில் சரண் அடைந்துள்ளனர்.

தாங்கள்தான் நீதிமன்ற வளாகத்திலேயே கார்த்திக், விக்கி இருவரையும் வெட்டிக் கொன்றதாக அவர்கள் பொலிசாரிடம் ஒப்புக் கொண்டுள்ளனர்.

இந்நிலையில், கார்த்திக், விக்கி ஆகிய இருவரையும் கொலை செய்ததாக வாழாந்தரவையைச் சேர்ந்த பாஸ்கரன், முரளி, அர்ச்சுணன், ரூபன், முருகேசன் என்ற 5 பேர் பரமக்குடி அருகே நயினார்கோவில் காவல் நிலையத்தில் சரண் அடைந்துள்ளனர்.

வாழாந்தரவையில் கடந்த மே மாதம் தங்கள் உறவினர்கள் 2 பேரை கழுத்தை அறுத்து கொலை செய்ததால், பழிக்குப்பழியாக திட்டமிட்டு நீதிமன்ற வளாகத்திலேயே இருவரையும் வெட்டிக் கொன்றதாக அவர்கள் பொலிசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்