திருமணமான ஒரு மாதத்தில் கணவனை கொலை செய்தது எதற்காக? மனைவியின் அதிர்ச்சி வாக்குமூலம்

Report Print Deepthi Deepthi in இந்தியா
598Shares

சென்னை திருவான்மியூர் நியூ பீச் கடற்கரையில் கணவர் கதிரவனுடன், மனைவி அனிதா கண்ணாமூச்சி விளையாடியபோது, இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திய அனிதாவின் காதலன் அந்தோணி ஜெகன் மூலம் கதிரவனை கொடூரமாகத் தாக்கினார்.

இந்த வழக்கில் அனிதாவும் அந்தோணி ஜெகனும் கைதாகி புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அடையாறு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்ற கதிரவன் நேற்று இறந்தார்.

இதைத்தொடர்ந்து முதலில் வழிப்பறி வழக்காகப் பதிவு செய்த திருவான்மியூர் போலீஸார் அதைக் கொலை வழக்காக மாற்றியுள்ளனர்.

திருமணத்துக்கு முன்பு, அனிதா தனது கல்லூரியில் படித்த வந்த அந்தோணியை காதலித்துள்ளார்.

இவர்களின் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அவசர அவசரமாக அனிதாவுக்கும் கதிரவனுக்கும் கடந்த செப்டம்பர் 12-ம் தேதி திருமணத்தை நடத்தி முடித்துள்ளனர்.

திருமணத்துக்குப்பிறகு அனிதா காதலையும் காதலன் அந்தோணி ஜெகனையும் மறந்துவிடுவார் என்று அவரின் பெற்றோர் கருதியுள்ளனர். ஆனால், அனிதா, கதிரவனுடன் சேர்ந்து வாழாமல் இருந்துள்ளார்.

இந்நிலையில் தான் இந்த கொலை சம்பவம் நடந்துள்ளது. கதிரவனை கொலை செய்த அந்தோணி ஜெகனையும் உறுதுணையாக இருந்த அனிதாவையும் கைது செய்து பொலிசார் சிறையில் அடைத்துள்ளனர்.

திருமணமான ஒரு மாதத்தில் கணவனை கொலை செய்தது குறித்து அனிதா அளித்துள்ள வாக்குமூலத்தில், என்னைவிட வயது குறைந்தவர் அந்தோணி ஜெகன். சில காரணங்களுக்காக எங்களின் காதலை பெற்றோர் ஏற்றுக்கொள்ளவில்லை.

நான் விதவையானால் நிச்சயம் அந்தோணி ஜெகனுடன் என்னை சேர்த்துவைத்துவிடுவார்கள் என்று கருதினேன்.

இதனால்தான் கதிரவனை கொலைச் செய்ய நானும் அந்தோணி ஜெகனும் திட்டமிட்டு கொலை செய்தோம் என கூறியுள்ளார்.

திருமணம் முடிந்தபிறகு தனது கணவனிடம் மனம் விட்டு பேசாமல் இருந்துள்ளார் அனிதா. இதனால் சம்பவம் நடைபெற்ற அன்று, அனிதா தனது கணவரிடம் சில முக்கிய தகவல்களை தெரிவித்துள்ளார்.

இனிமேல் இல்லற வாழ்க்கை இனிக்கும் என கதிரவன் மனதில் மனக்கோட்டை கட்டியுள்ளார். ஆனால், கண்ணாமூச்சி விளையாட அவரின் கண்கள் கட்டியபோது இருண்ட உலகம் அதன்பிறகு விடியவில்லை.

சுத்தியலால் தலையில் தாக்கப்பட்ட கதிரவன், கோமா நிலையிலேயே இறந்துவிட்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்