விஷம் குடிக்க போட்டி போட்டுக்கொண்ட மாமியார்-மருமகள்: முடிவில் நேர்ந்த சோகம்

Report Print Kabilan in இந்தியா
66Shares

தமிழகத்தில் குடும்பத் தகராறு காரணமாக மாமியார், மருமகள் போட்டி போட்டுக்கொண்டு விஷம் குடித்ததில், மாமியார் மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் பெரியபுதூர் பகுதியைச் சேர்ந்த சுந்தரம்-சாந்தி தம்பதியின் மூத்த மகன் சுரேஷ். இவருக்கும், சரஸ்வதி என்ற பெண்ணிற்கும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்னர் திருணம் நடைபெற்றது.

இவர்களுக்கு ஐந்து வயதில் ஒரு மகன் உள்ள நிலையில், சரஸ்வதி தனது கணவருடன் சண்டையிட்டு 4 ஆண்டுகளாக தனது பெற்றோரின் வீட்டில் இருந்து வந்தார்.

இந்நிலையில், உறவினர்களின் சமாதான பேச்சுவார்த்தைக்கு பின்னர், கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கணவருடன் சேர்ந்து வாழ முடிவெடித்து அவரது குடும்பத்தாருடன் வசித்து வந்தார். இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு சரஸ்வதிக்கும் அவரது மாமியார் சாந்திக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இதில் இருவரும் தற்கொலை செய்துகொள்ள போவதாக ஒருவரையொருவர் மிரட்டியதாக கூறப்படுகிறது. அதன் பின்னர் சாந்தி விஷம் குடித்துள்ளார். இதனால் மறுநாள் காலை அவர் இறந்து கிடந்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, அக்கம்பக்கத்தினருக்கு சரஸ்வதி தகவல் தெரிவித்ததைத் தொடர்ந்து, பொலிசார் வீட்டிற்கு வந்து சாந்தியின் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில், சாந்தியின் தற்கொலைக்கு தான் காரணமாகி விடுவமோ என பயந்த சரஸ்வதியும் விஷம் குடித்ததால், அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு உடனடியாக மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்