தொல்லை கொடுத்த சீனியர் மருத்துவர்: விபரீத முடிவெடுத்த ஜூனியர் பெண்மருத்துவர்

Report Print Vijay Amburore in இந்தியா
101Shares

உத்திரபிரதேச மாநிலத்தில் சீனியர் மருத்துவர் பாலியல் தொல்லை கொடுத்து வந்ததால், பெண் மருத்துவர் மயக்க மருந்தில் விஷம் கலந்து ஊசி போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உத்திரபிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள கிங் ஜார்ஜ் மருத்துவ கல்லூரியில் ஜூனியர் மருத்துவராக பணியாற்றி வருபவர் மனிஷா சர்மா (27). இவர் கடந்த சனிக்கிழமையன்று மயக்க மருந்துடன் கூடிய விஷ ஊசி போட்டுக்கொண்டதாக பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் மனிஷாவை விரைந்து மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவருடைய தற்கொலை முயற்சிக்கு காரணம் கல்லூரியில் சீனியர் மருத்துவர் உத்தம் சிங் கொடுத்து வந்த தொடர் பாலியல் தொல்லை என்பது தெரியவந்தது.

மருத்துவமனையில் மனிஷாவிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று காலை அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதனையடுத்து மருத்துவர் உத்தம் சிங் மீது வழக்கு பதியப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக தற்கொலை செய்துகொண்ட மனிஷா சர்மா வியாபாம் ஊழல் குற்றச்சாட்டில் சிபிஐயால் கைது செய்யப்பட்டு கடந்த 2015ம் ஆண்டு 6 மாதம் சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்