அன்புக்கு மதம் தடையல்ல: இந்துக்கள் பண்டிகையில் கலக்கல் நடனமாடிய கிறிஸ்தவ பாதிரியார் வீடியோ

Report Print Vijay Amburore in இந்தியா
126Shares

மும்பையில் இந்துக்கள் பண்டிகையான நவராத்திரி விழாவில் கலந்து கொண்டு கிறிஸ்தவ பாதிரியார் நடனமாடும் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

வேற்றுமையில் ஒற்றுமையுள்ள நாடு இந்தியா என பொதுமக்கள் அனைவராலும் அழைக்கப்பட்டு வந்தாலும் கூட, மதம், சாதியின் பெயரால் இன்றளவும் ஏராளமான கொடுமைகள் நடந்த வண்ணம் உள்ளன.

அரசியல் லாபத்திற்காக சில காட்சிகள் கூட மக்களை தூண்டிவிட்டு வேடிக்கை பார்த்தது வருகின்றனர். ஆனால் அவற்றையெல்லாம் தவிடுபொடியாக்கி, மனிதத்தை போற்றும் விதமாக சில நல்ல காரியங்களும் ஆங்காங்கே மனிதர்களால் நிகழ்த்தப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் மும்பையில் இந்து மக்கள் அனைவரும் மிகவும் மகிழ்ச்சியாக கொண்டாடிய நவராத்ரி விழாவில், கிறிஸ்தவ பாதிரியாராக கிறிஷ்டியானோ டிசோசா கலந்துகொண்டு நடனமாடியுள்ளார். இந்த வீடியோவானது தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

இந்த சம்பவம் குறித்து பாதிரியார் கூறுகையில், நாங்கள் மக்களுக்கு இடையில் அன்பை வளர்க்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம். அதன் ஒரு வெளிப்பாடாகவே இந்த சம்பவம் நிகழ்ந்தது என தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்