உண்மையில் அங்கு நடந்தது இதுதான்: சுவிஸுக்கு சின்மயியை அழைத்து சென்றவர் பேட்டி

Report Print Raju Raju in இந்தியா
2336Shares

வைரமுத்து மீது சின்மயி குற்றம்சாட்டிய விடயம் நடந்திருக்க வாய்ப்பே இல்லை என சுவிட்சர்லாந்துக்கு அவரை அழைத்து சென்ற இனியவன் என்பவர் கூறியுள்ளார்.

சுவிட்சர்லாந்தில் கடந்த 2004-ல் இசை நிகழ்ச்சி நடந்தபோது கவிஞர் வைரமுத்து தன்னை படுக்கைக்கு அழைத்தார் என பாடகி சின்மயி கூறியுள்ளார்.

இதை வைரமுத்து மறுத்த நிலையில், தன் மீது தவறிருந்தால் வழக்கு தொடரலாம் என கூறினார்.

இந்நிலையில், சுவிட்சர்லாந்து இசை நிகழ்ச்சிக்கு சின்மயி உட்பட எல்லோரையும் அழைத்து சென்ற இனியவன் என்பவர் இது குறித்து பேசியுள்ளார்.

அவர் கூறுகையில், சின்மயி கூறுவது முற்றிலும் தவறானது, அங்கு இது போல நடப்பதற்கு வாய்ப்பே இல்லை.

ஏனெனில் சின்மயியும், வைரமுத்துவும் தனித்தனியான இடத்தில் தான் தங்கியிருந்தனர்.

நிகழ்ச்சி முடிந்ததும் அனைவரும் தனித்தனியாக வந்துவிட்டோம்.

இப்படி இருக்கையில் சின்மயி ஏன் இதுபோல பேசுகிறார் என தெரியவில்லை.

சம்பவத்துக்கு பின்னர் வைரமுத்து வீட்டுக்கு சென்று சின்மயி திருமண அழைப்பிதழ் கொடுத்தார், அதே போல வைரமுத்து பிறந்தநாளுக்கு அவர் அம்மா வாழ்த்தினார்.

அப்போது நீங்களும், ஏ.ஆர் ரகுமானும் சின்மயிக்கு கிடைத்த வரப்பிரசாதம் என சின்மயி தாய் வைரமுத்துவிடம் கூறினார்.

சின்மயி பயத்தால் இந்த விடயத்தை இப்போது கூறுவதாக சொல்கிறார். ஆனால் அவர் தைரியமான பெண்ணாவார்.

அந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவன் நான் தான், எல்லோரையும் அங்கு நான் தான் அழைத்து சென்றேன். சின்மயி இப்படி சொல்வது அதிர்ச்சியாக உள்ளது என கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்